9§ |
சைவ சித்தாந்தம் என்றால் என்ன?§ |
சைவ சித்தாந்தம் என்பதே இந்து சமயத்தில் நாம் பின்பற்றும் சமயத்தின் பெயர். ஆறு சமயப் பிரிவுகளில் இதுவே இன்று உலகில் மிக அதிகமாக பின்பற்றப்படும் உயிரோட்டமிக்க மிகப் பழமையான சமயம். இச்சமயம் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ளது. ஆயிரமாயிரம் வழிபடும் கோயில்களையும், உயிரோடிருக்கும் பல துறவிகள் சந்நியாச பரம்பரைகளையும் அது கொண்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுதும் சைவ சித்தாந்தம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. இன்று அச்சமயம் தமிழ் பாரம்பரியமுடைய தென்னிந்தியாவிலும், ஸ்ரீலங்கா, மலேசியா மற்றும் இதர இடங்களிலும் மிக வலுவாக வேரூன்றி இருக்கிறது. உண்மையில் சில நேரங்களில் இது தமிழ் சைவசமயம் என்றே குறிப்பிடப்படுகின்றது.§
சைவ சித்தாந்தம் என்றால் “சைவ சமயத்தின் இறுதியான முடிந்த முடிபு” என்று பொருள்படும். இன்று சைவ சித்தாந்தத்தில் இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. ஒன்று பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் தனித்தனிப் பொருள்கள் என்றும் அவை என்றென்றும் அனாதி என்ற மெய்கண்டாரின் தத்துவக் கொள்கையைக் கொண்டது. மற்றொன்று ஆன்மாவும் கடவுளும் இறுதியில் ஒன்றே என்று வலியுறுத்திக் கூறும் திருமூலரின் அத்துவிதக் கோட்பாடு. நாம் திருமூலரின் சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறோம். அது சுத்த சைவ சித்தாந்தம் என்று குறிப்பாக அழைக்கப் படுகிறது. இரண்டு சமயப் பிரிவினரும் சிவனே எல்லாம் என்றும் அவரிடமிருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றலே சக்தி என்றும் அச்சக்தியை அவரிடமிருந்து பிரிக்க இயலாது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். கோயில்களில் சிவனும் சக்தியும் வேறு வேறாக தெய்வீகத் தம்பதிகளாக வீற்றிருப்பதைக் காண்கிறோம். ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் ஒருவரே. தம்மைப் படைத்த சிவனுக்கு கணபதியும் முருகனும் சேவை செய்வதால் அவர்களையும் நாம் பெருமானாக வணங்குகிறோம்.§
ஓம் நமசிவாய என்ற புனித மந்திரத்தை நாம் உச்சரிக்கிறோம். உருத்திராக்க மணியும் புனித திருநீற்றையும் நாம் அணிகிறோம். சைவ ஆசாரியர்கள் பலரையும் நாம் வணங்கி போற்றுகிறோம். உயிருடன் வாழும் ஒரு சற்குரு (குரு) அவசியம் என நாம் நம்புகிறோம். புனித சிவலிங்கத்தை (லிங்கம்) நெஞ்சார வணங்குகின்றோம், பிற சிவ அடியார்களோடு உறவாடுகிறோம் (சங்கம்)). பெருமைமிக்க பல கோயில்களை நாம் பக்தியோடு வணங்குகிறோம் (வழிபாடு). இந்த குரு, லிங்க, சங்கம, வழிபாடு என்ற நான்கு நெறிமுறைகளும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடு என பழங்கால தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படுகின்றது.§
குருதேவர்: இந்த பூமியில் மற்ற சமயங்களைவிட சைவ சமயத்தில், சிறப்பாக சைவ சித்தாந்தத்தில் உள்ள மரபும் தத்துவக் கருத்துக்களும் மனித குலத்தின் மீண்டெழும் எதிர்பார்ப்பான நேரடி ஆன்மீக விழிப்பையும் ஞானமடைந்த வாழ்வையும் கூடுதலாகவே தர இயல்கிறது.§