6§ |
இந்து சமயம் ஒரு மதமா அல்லது ஒரு வாழ்க்கை முறையா?§ |
இந்து மதம் ஒரு சமயமாகும்; அது ஒரு வாழ்க்கை முறையுமாகும். இவ்விரண்டு கருத்துக்களும் உண்மையே. மிகவும் உயரிய ஆன்மீக வாழ்வு முறையைப் பெற்றுள்ள அது, சமயம் என்ற சொல்லுக்கு பூரண விளக்கத்தைப் பெற்றுள்ளது. சமயம் என்ற சொல்லுக்கு குறிப்பிட்ட ஒரு நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் என்று பொருள்படும். அச்சொல் “ரெலிஜியோனெம்” (religionem) என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அதற்கு புனிதமானதை மதிக்க வேண்டும், தெய்வங்களைப் போற்றவேண்டும் என்று பொருள்படும். அவ்வாறு பார்க்கும்போது இந்து சமயம் அவ்விளக்கத்துக்குமேல் அதிக தகுதிபடைத்துள்ளது எனலாம். இதர பல சமயங்களைப்போல் அது உலகியல் வாழ்வு என்றும் ஆன்மீக வாழ்வு என்றும் வாழ்க்கையை இரு துருவங்களாகப் பிரிக்கவில்லை. பக்திமிக்க இந்துக்களுக்கு வாழ்க்கையின் அனைத்துமே ஆன்மீகம்தான்; வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே நாம் கடைப்பிடிக்கும் சமய நெறிகளின் ஓர் அங்கமே.§
இன்றைய உலகில் சமயம் என்ற சொல் மிகவும் சக்திவாய்ந்த ஓர் சொல்லாகும். இந்தியாவின் தொன்மையான சமய நம்பிக்கையை விவரிக்க அச்சொல்லை நாம் சுதந்திரமாக உபயோகிக்க வேண்டும். இதன் தொடர்பில் ‘இந்துசமயம் ‘ என்ற சொல்லை நாம் பார்க்கும்போது அச்சொல்தான் சனாதன சமயத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளது.§
பல நூற்றாண்டுகளாக இந்து சமயம் மேலை நாட்டினரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் தவறாக இழிவுபடுத்தப்பட்டுவந்தது. ஆனால் அந்நிலை இப்போது மாறிவிட்டது. 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்து சமயம் இப்பூவுலகின் மிகவும் காருண்யமிக்க, ஞானாதிசயமான, ஞானமுக்தி அருளும் சமயமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சமயப் போராட்டங்களும் வெறித்தனமும் கொண்ட இக்காலத்துக்கு இந்து சமயம் போதிக்கும் அமைதியும், தீங்கிழையாமையும், திறந்த மனப்பான்மையும் மிகமிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.§
இந்து சமயத்தின் அறிவியலான யோகம், வாஸ்து, சோதிடம், ஆயுர்வேதம் ஆகியன சிறப்பான மதிப்பைப்பெற்று போற்றப்படுவதுபோல், இம்மதிப்பீடுகளும் மதிக்கப்படுகின்றன.§
‘இந்து சமயம்’ என்ற சொல்லை நீக்கிவிட்டு வெறும் ‘வாழ்க்கைமுறை’ என்றுமட்டும் கொள்வோமானால், உலகில் மிக உயர்வாகப் போற்றப்படும் இந்து சமயத்தை அதன் உயர் பீடத்திலிருந்து அதன் உயரிய தகுதியிலிருந்து அகற்றியவர்களாவோம். அப்படி நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. இந்து என்ற குடையின்கீழ் நம் குடும்பத்தின் எல்லா நம்பிக்கைகளும் ஒன்றிணைந்து இதர மதங்களுக்கு அளிக்கப்படும் அதே பாதுகாப்புக்கள் பலவற்றை நாமும் அனுபவிக்கிறோம். ஒரே குரலில் கண்ணியமாக செய்தி நிறுவனங்களுக்கும், அரசுக்கும், கல்வி வாரியங்களுக்கும், திட்டமிடும் இலாகாக்களுக்கும் நம்மால் சிறப்பாக குரல்கொடுக்க இயலும். தம் மத நம்பிக்கைகள்மிமீ இந்துக்களுக்கு மேலும் நம்பிக்கை வளர்ந்து கொண்டு வருவதுடன், ‘நான் ஓர் இந்து’ என்று பெருமையுடன் அறிவிக்கின்றனர். உலகின் பல பல்கலைக்கழகங்களில் இந்துக்கள் இதர மதத்தினரோடு சரிசமமாக பெருமையோடு நிற்கின்றனர். இந்து சமயம் என்ற பெயரை நாம் எடுத்துவிட்டால் அது சாத்தியமாகாது. சமயம் என்ற சொல்லையும் நாம் அகற்றிவிட்டால் அது சாத்தியமாகாது§
குருதேவர்: தர்மம் என்றால் புண்ணியம், ஒழுக்கநெறி, நன்னடத்தை, சமயக் கடமை மற்றும் ஞானியின் வாழ்க்கை வழிமுறைகளுமாம்.§