Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கயமை

1071. §

இழிவான இயல்புடையோர் புறத் தோற்றத்தில் மக்களைப் போல் இருப்பர். இது போன்ற ஒப்புமையை யாம் எங்கும் கண்டதில்லை.§

1072. §

நன்மையைச் செய்பவரை விட இழிவுள்ளம் உடையோர் மகிழ்வுடன் வாழ்வர். மனச்சாட்சி என்பது அவர் உள்ளத்தை என்றுமே உறுத்துவது இல்லை.§

1073. §

கொடிய கயவரும் தாம் விரும்பிய வாறே எதனையும் செய்து நெடுங்காலம் வாழ்தலால் அவரும் தேவரைப் போன்றவர்.§

1074. §

கீழ் மகன் தன்னிலும் கொடியவனைச் சந்தித்தால், அவனிலும் கொடுரச் செயல்களைப் புரிந்து தானே பெருமிதம் கொள்வான்.§

1075. §

கீழ் மக்களைத் தூண்டுவது அவர் கொண்டுள்ள பயமே. அது தவிர இலாபம் வருவதில் ஆசை கொள்வதும் அவருக்குத் தூண்டு கோலாகும்.§

1076. §

கீழ் மக்கள் தாம் அறிந்த இரகசியங்களைப் பிறருக்குச் சொல்லித் திரிவதால் அவர்கள் பறை முரசைப் போன்றவர்.§

1077. §

கன்னத்தில் அறைந்து பல்லை உடைப்பவருக்குப் பயந்தாலன்றி கயவர் வேறெவருக்கும் எச்சிற்கையைக் கூட உதற மாட்டார்.§

1078. §

மேல் மக்கள் பிறர் குறையைக் கேட்ட உடனே உதவி செய்வர். கீழ் மக்களின் உதவி கரும்புச் சாற்றைப் போல் பிழிந்து எடுத்தால் தான் கிடைக்கும். §

1079. §

கீழ் மக்கள் பிறர் நன்றாக உடுப்பதும் உண்பதும் கண்டால் பொறாமை கொண்டு அவர்களிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பர்.§

1080. §

கீழ் மக்கள் எவ்வகையில் பயன்படுவார் எனின், தமக்கு நெருக்கடியான நிலைமை வரும்போது தம்மையே பிறருக்கு விற்கத் தயங்க மாட்டார்.§