Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

இரவு

1051. §

பிச்சை கேட்க வேண்டுமானால் பொருள் உள்ளவரைக் கேட்க. அவர் இல்லை என்று மறுத்தால் பழி அவரையே சாரும். கேட்பவரை அன்று.§

1052. §

இரந்து கேட்ட பொருள், கொடுப்பவர் மனம் கோணாது கொடுத்தால் பிச்சை கேட்பதுமே இன்பம் தர வாய்ப்பு உண்டு.§

1053. §

கடமை அறிந்து இல்லை என்று சொல்லாதாரிடம் பிச்சை கேட்பதும் வறியோர்க்கு அழகாகும்.§

1054. §

இரந்தவர் வேண்டுவதை கனவில் கூட மறுக்காதவர் இருக்கின்றனர். அவரிடம் பிச்சை கேட்பது பிறருக்குக் கொடுப்பதற்குச் சமமாகும்.§

1055. §

தம்மிடம் உள்ளதை இல்லை என மறுக்காதவர் இவ்வுலகில் இருப்பதாலே அவர் முன் நின்று இரத்தல் சாத்தியமாகின்றது.§

1056. §

உள்ளதை இல்லை என்று மறுக்கும் இழிவான பழக்கம் இல்லாதவரைக் கண்டதுமே இரப்பதால் வரும் துன்பம் அகன்று விடும்.§

1057. §

ஒதுக்கி இழிவாகப் பேசாமல் கொடுப்போரைக் கண்டால் பிச்சை கேட்பவர் மனது மகிழ்ச்சி அடையும்.§

1058. §

பிச்சை கேட்பார் இல்லையானால் பசுமை நிறைந்த இந்த உலகம் மரப்பாவைகள் இயங்கும் மேடை ஆகி விடும்.§

1059. §

பிச்சை கேட்டு நன் கொடைகள் பெறுவதற்கு எவருமில்லை எனில் கொடை வள்ளல்கள் எவ்வாறு புகழ் பெறுவர்?§

1060. §

ஒருவனது வறுமையே கொடை அளிப்பதற்குத் தக்க சான்றாக இருப்பதால் பிச்சை எடுப்பவன் கேட்பது தனக்குக் கிடைக்காத போதும் கோபங் கொள்ளல் ஆகாது.§