Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

குடிமக்கள் நலம் உயரச் செய்தல்

1021. §

எடுத்த கருமங்களை நிறைவேற்ற இடையறாது உழைப்பேன் என உறுதியோடு கூறி அவ்வாறு நடப்பதைப் போல் பெருமை கொடுப்பது வேறெதுவும் இல்லை.§

1022. §

விடா முயற்சியும் ஆழ்ந்த அறிவும் கொண்டு சலியாது உழைப்பவன் குடி உயர்ந்து சிறப்படையும்.§

1023. §

தன் குலம் தழைத்தோங்க ஒருவன் உறுதி கொண்டால் தெய்வம் தானே வரிந்து கட்டிக் கொண்டு வந்து நின்று உதவி செய்யும்.§

1024. §

தன்குலம் மேலும் உயர ஓயாது உழைப்பவனின் முயற்சி அவனே திட்டம் ஏதும் வகுத்திராவிடினும் தானே நிறைவு பெறும்.§

1025. §

குற்றம் செய்யாது தன் குலம் உயர வாழ்பவனை உலகில் வாழ்வோர் தம் சுற்றமாகத் தேர்ந்து கொண்டாடுவர்.§

1026. §

தான் பிறந்த குலத்திற்கு வழிகாட்டித் தலைமை ஏற்று வாழ்தலே உண்மையான ஆண்மையுடைமை ஆகும்.§

1027. §

போர்க்களத்தில் நடப்பது போலவே மக்கள் குலத்திலும் ஆற்றல் மிக்காரெ பொறுப்பு எடுத்துச் செயல் புரிவர்.§

1028. §

தம் குலத்தின் உயர்வுக்கு உழைப்பவர் நேர காலம் வரக் காத்திருப்பது இல்லை. தம் மதிப்பைப் பெரிதாகக் கருதி காலம் தாழ்த்துவதால் குலத்தின் பெருமை அழியும் என்று அவர் அறிவர்.§

1029. §

தன்குடும்பத்துக்கு வரும் துன்பங்களைத் தடுத்துக் காப்பவன் உடல் துன்பத்துக்கே இருப்பிடம் ஆகிறது அல்லவோ?§

1030. §

ஒர குடும்பத்தைக் காக்க வல்ல நல்லவர் இல்லாமல் போனால் துன்பம் வந்து சாடும் போது அக் குடும்பமே மாழ்கி மடிந்து விடும்.§