Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பயன்படாச் செல்வம்

1001. §

பெருஞ் செல்வத்தைத் தேடி வைத்து அனுபவியாது இருப்பவன் பயன் இல்லாத அவன் செல்வக் குவியல் போலவே செத்தவனாகக் கணிக்கப்படுவான்.§

1002. §

செல்வமே எல்லாம் தரும் என எண்ணிச் சிறிதும் பிறர்க்குக் கொடாத உலோபிக்கு இழிவான பிறவி வந்து சேரும்.§

1003. §

புகழை விரும்பாது செல்வம் சேர்த்து வைப்பதில் மட்டும் பேராசை கொண்டவர் நிலத்திற்குப் பெரும் பாரமாவார்.§

1004. §

எவரும் நேசியாத தனி ஒருவன் தன் வருங்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லலாம் என எண்ண என்ன தான் உண்டு.§

1005. §

வேண்டியவருக்கும் உதவாமல் தாமும் அனுபவியாமல் உள்ள ஒருவன் கோடி கோடியாகக் குவித்து வைத்திருந்தாலும் ஒன்றுமே இல்லாத வறியவனாவான்.§

1006. §

செல்வத்தின் பயனைத் தானும் அனுபவியாது வேண்டியவருக்கும் உதவாது விடுபவனுக்கு அது ஒரு சாபக் கேடாகவே இருக்க முடியும்.§

1007. §

பேராசை பிடித்த ஒருவன் வேண்டியவருக்கு வழங்காத செல்வம் அழகி ஒருத்தி கன்னியாகவே இருந்து முதுமை அடைதல் போல் ஆகும்.§

1008. §

எவரும் விரும்பாதவன் செல்வம் ஊரின் நடுவில் நிற்கும் நச்சு மரத்தின் பழம் போன்றது.§

1009. §

செல்வப் பெருக்கையே நினைத்து அன்பும் தரும நெறியும் கைவிட்டுத் தானும் அனுபவியாது விடுபவன் பொருளை முடிவில் அன்னியரே அனுபவிப்பர்.§

1010. §

வாரி வழங்கும் செல்வன் சிலகாலம் வறியவனாகுதல் மழை பெய்யும் கருமேகம் போது நீர் குறைந்து வெண்மேகம் ஆவது போன்றதே.§