Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பண்பு உடைமை

991. §

எல்லோரிடமும் எளிமையும் கனிவும் தோன்ற வாழ்பவன், பண்புடைமை எனும் பெருங் குணத்தை மிக எளிதில் பெறுவான்.§

992. §

அன்புடன் இணைந்த கருணை, உயர் குலத்தில் பிறத்தல் எனும் இவ்விரண்டும் நற்பண்பை எவருக்கும் நல்கும் என்பர்.§

993. §

மக்களிடம் காணப்படும் ஒப்புமை உடல்கள் ஒன்று இருத்தலால் வருவதன்று. உள்ளத்தில் பண்புடைமையால் ஒத்து இருப்பதே உண்மையான ஒப்புமை ஆகும்.§

994. §

இரக்க சிந்தனையுடன் பிறருக்குப் பயன்பட வாழும் மாந்தரின் தனிப் பெரும் பண்பை உலகம் போற்றி நிற்கும்.§

995. §

விளையாட்டாகவே இகழ்ந்து பேசினாலும் அது மற்றவருக்குத் துன்பம் விளைவிக்கும். எனவே மனித சுபாவம் அறிந்தோர் பகைவரோடு பண்போடு பழகுவார்.§

996. §

நற்பண்புடையோர் வாழ்வதால் உலகம் நிலை பெறுகின்றது. அவர்கள் இல்லாவிடின் உலகம் வெறும் பொடிப் பொடியாக அழிந்து விடும்.§

997. §

மக்கள்பால் பண்பு காட்டாதோர் கூர்மையான மதி நுட்பம் பெற்றிருப்பினும் மரம் போலவே மனம் அற்றவராவார்.§

998. §

நட்பு இல்லாமல் தீமை செய்யும் மக்களிடத்திலும் பண்புடன் பழகாது இருத்தல் இழிவான செயலாகும்.§

999. §

சிரித்து மகிழ்ந்து உறவாடத் தெரியாதவருக்கு உலகம் முழுதுமே பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்து இருப்பது போலிருக்கும்.§

1000. §

அன்பு செறிந்த பண்பாடில்லாதவரிடம் சேர்த்த பெருஞ் செல்வம் அழுக்கான பாத்திரத்தில் புளித்துப் போன பாலுக்கு ஒப்பாகும்.§