Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மானம்

961. §

வாழ்விற்கு மிக அவசியமான செயல்களாயினும் அவற்றால் மானக் கேடு வருமானால் அவற்றைச் செய்யாது விடுக.§

962. §

பெருமையோடு மானத்தைப் பேண விரும்புபவர், பெரும் புகழ் பெறுவதற்குக் கூட தம் குடும்பப் பெருமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்ய மாட்டார்.§

963. §

செல்வம் பெருகிய காலத்தில் பணிவுடைமை வேண்டும். அது குறைந்த போதும் தாழாத பெருமித மனப்பான்மை வேண்டும்.§

964. §

தம் உயர்ந்த நிலைக்குப் பொருந்தாத இழிவான செயல் புரியும் மக்கள் தலையிலிருந்து உதிரும் மயிரைப் போல் தாழ்வு அடைவர்.§

965. §

மலை போல் உயர்ந்த சிறப்புப் பெற்றவரும் சிறிய குன்றிமணி அளவே ஆன இழிவான செயல் செய்தாலும் மிகத் தாழ்வாகவே மதிக்கப் படுவார்.§

966. §

மானத்தை இழந்து தன்னை அவமதிப்பாரைப் பணிந்து நடப்பவனுக்கு இவ்வுலகில் புகழும் கிட்டாது தேவருலகில் அடைக்கலமும் கிட்டாது. பின் என்ன தான் பயன் கருதி அவ்வாறு செய்கிறான்.§

967. §

தன்னை மதியாதோர் உடன் வாழ்வதை விட ஒருவன் மானம் விடாது அழிந்தான் எனச் சொல்லப்படுவது நன்று.§

968. §

உயர் குடிப் பிறந்து தன்மானம் இழந்து விட்டவன் உடலில் உயிர் நீங்காது இருக்க மருந்து ஏதாவது உண்டோ?§

969. §

தன் உடலிலிருந்த மயிரை இழந்தாலும் தன் உயிரை விடுகின்ற கவரி மான் போலத் தன்மானம் உடையவர் அதற்குக் கேடுவரின் தம் உயிரையே விட்டு விடுவர்.§

970. §

தமக்கு மானக்கேடு வரும் போது உயிரையே விட்டு விடுபவரின் பெருந் தகைமையை உலகமே போற்றி நிற்கும்.§