Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

குடிமை

951. §

நேர்மை பிசகாத மனம் தீயதை ஒதுக்கும் குணம் என்ற இரண்டும் உயர் குடியில் பிறந்தவரிடமே சேர்ந்து இருக்கும்.§

952. §

உயர் குடிப்பிறந்தவர் நல்லொழுக்கம், வாய்மை, தன்னடக்கம் எனும் இம் மூன்றிலிருந்தும் தவறமாட்டார்.§

953. §

புன்னகை, தாராள மனப்பான்மை, நன்நடத்தை இன் சொல் எனும் இந்நான்கும் உண்மையான பெருமகனின் நற்பண்புகளாகும்.§

954. §

கோடி கோடியாகச் செல்வம் பெறினும் உயர் குடிப் பிறந்தோர் இழிந்த செயல் எதுவும் புரியார்.§

955. §

தாராளமாக வழங்க முடியாமல் செல்வம் குறைந்த போதிலும் உயர்ந்த குடிமக்கள் தம் பண்பிலிருந்து தவறுவதில்லை.§

956. §

மாசு இல்லாத பழங்குடிப் பண்பைப் பேணி வாழும் மனவுறுதி உள்ளவர் வஞ்சகமுள்ள இழி செயல்களைப் புரியத் துணியவே மாட்டார்.§

957. §

உயர் குடிப் பிறந்த மக்களின் குற்றங்கள் உயர் வானத்தில் நிலாவின் களங்கம் போல் தெள்ளத் தெளிவாக தெரியும்.§

958. §

நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனிடம் அன்பான மனப்பான்மை இல்லாது போனால் அவன் குடிப்பிறப்புப் பற்றியே ஐயம் உண்டாகும்.§

959. §

மண்ணின் இயல்பை அதில் முளைக்கும் செடியின் தன்மையில் தெரிவது போல மனிதனின் வாய்ச் சொல் அவன் பிறந்த குலத்தைக் காட்டும்.§

960. §

நன்மதிப்பைப் பெற விரும்புவோருக்குத் தன்னடக்கம் வேண்டும்.
தம் குலத்தின் பெருமையை விரும்புவோர் எல்லோரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
§