Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பெரியாரைப் பிழையாமை

891. §

ஆற்றல் மிகுந்தவரை அவமதிக்காமல் இருப்பதே எவரும் தம்மைக் காப்பற்றுவதற்கு மேற்கொள்ள வெண்டிய வழிகளில் தலை சிறந்தது ஆகும்.§

892. §

ஆற்றல் மிக்க பெரியோரை மதியாமல் நடந்தால், அப்பெரியோரால் என்றும் நீங்காத துன்பங்கள் வந்து சேரும்.§

893. §

நினைத்தால் எதையும் அழிக்கவல்ல பெரியோரிடம் தவறு செய்து அவர் கோபத்தைத் தூண்டுவதே தாமே தம் அழிவைத் தேடுபவர்க்கும்ச் சுலபமான வழி.§

894. §

ஆற்றல் இல்லாதவர் ஆற்றல் மிக்கோருக்குத் துன்பம் விளைத்தல்
மரணத்தைக் கை நீட்டி அழைப்பதற்கு ஓப்பாகும்.
§

895. §

கொடுர மன்னனின் சினத்துக்கு வீணே ஆளாகுபவன் எங்கு சென்றாலும் என்னதான் செய்தாலும் மடிவது திண்ணம்.§

896. §

தீயினால் சுடப்பட்டாலும் தப்பிப் பிழைக்கலாம் பெரியோர்
சினத்தைத் தூண்டுவோர் பிழைப்பதற்கு இல்லை.
§

897. §

அறநெறி வழவாத பெரியோர் சினத்துக்கு ஆளாவோர் பற்பல சிறப்பும் மிகுந்த செல்வமும் உடையவராய் இருந்தாலும் பயன் என்ன?§

898. §

குன்றுபோல் சிறப்பு உயந்தோரை இழிவாக மதித்தால் நிலம் போல் நிலைத்துத் தோன்றுபவர் உற்றார் உறவினருடன் மடிவர்.§

899. §

சினம் அடக்கி வாழும் குரு முனியைச் சீறச் செய்தால்
முடிதாங்கும் அரசனும் தன் அரசை இழந்து அழிவான்.
§

900. §

பலமான காவல்களுடன் வாழும் மன்னன் ஆனாலூம் துறவியரின்
தவ வலிமை தரும் சாபத்திலிருந்து தப்ப இயலது.
§