Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

உள்பகை

881. §

சுகம் தரும் மர நிழலும் குள நீரும் நோய்க் கிருமி இருந்தால் துன்பம் தரும். அவ்வாறு உறவினர் கெடுதி விளைத்தால் துன்பம்தான் விளையும்.§

882. §

வாள்போல் வெளிப்படையான பகையைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. ஆனால் உறவினர்போல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுதல் வேண்டும்.§

883. §

உட்பகைக்கு அஞ்சி உம்மைக் காத்துக் கொள்க. இன்றேல் தொல்லைகள் வருங்காலம் அது குயவனின் மட்கலம் அறுக்கும் கருவி போலத் தப்பாது பெரிய காயம் உண்டாக்கும்.§

884. §

எவளியில் தெரியாத உட்பகை மனத்தில் மட்டும் மறைந்திருக்கும் என்றாலும் உற்றார் உறவினருள் அது தொல்லைகள் பல விளைவித்துவிடும்.§

885. §

உறவினருள் மறைந்திருக்கும் உட்பகை துன்பங்கள் மட்டுமல்ல, உயிருக்கும் முடிவைக் கொண்டு வரும்.§

886. §

தம் உற்றார் உறவினருடன் பகைமை தோன்றினால் அப்பகையினால் எந்நாளும் கெடாமல் இருப்பது அரிது.§

887. §

பாத்திரமும் மூடியும் போலப் பொருந்தி ஒற்றுமை இருப்பது போல் தோன்றினும் உட்பகை உள்ள வீட்டில் மனப்பொருத்தமே இருக்காது.§

888. §

அரத்தால் தொடர்ந்து தேய்ப்பதால் இரும்பு வலி இழத்தல் போல இடையறாத பூசலினால் ஒரு குடும்பத்தின் பலம் படிப்படியாக தேய்ந்து அழியும்.§

889. §

உட்பகையால் ஏற்படும் பிளவு முதலில் எள்ளின் அளவாக இருந்தாலும் அது குடியையே அழிக்க வல்லது.§

890. §

ஒற்றுமையாகச் சேராத மக்களுடன் வாழ்தல் ஒரு குடிசையுள் கொடிய நாகத்துடன் வாழ்தலைப் போல் ஆகும்.§