Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பகைத்திறம் தெரிதல்

871. §

பண்பிற்கு நேர்மாறாகவுள்ள பகைமை எனும் தீமையை விளையாட்டுக்காக வேனும் விரும்புதல் ஆகாது.§

872. §

வில் ஏந்தி உயிர் வாழ்வார் பகைமையைத் தாங்குவது கொடிது ஆயின் தம் சொல் வன்மையால் தாக்க வல்ல அறிஞரை ஒரு போதும் பகைத்தல் ஆகாது.§

873. §

வாழ்வில் தனித்தவனாக இருந்து பலரோடு பகைத்துக் கொள்பவன் பித்துப் பிடித்தவனிலும் அறிவில்லாத பித்தனாவான்.§

874. §

பகைவரையுமே நண்பராக்கிக் கொள்ளும் பண்புள்ள மன்னரின் பெருமையால் இவ்வுலகு வாழ்கிறது.§

875. §

பகைவர் இருவர் இருந்து துணையாகக் கூட்டாளிகள் எவரும் இல்லை எனக்காணும் தனி ஒருவன் அவர்களில் ஒருவரைத் துணையாக்கிக் கொள்வான்.§

876. §

அழிவு வரும் காலத்தில் புதிதாக வந்த நண்பரையோ பகைவரையோ அணுகாது விலகாது அவரைப் புறத்தே தனியாக விட்டு விடுக.§

877. §

உமது தொல்லைகளை உணராதவருக்கு அவற்றை எடுத்துக் கூறாது விடுக. அது போல உமது பலவீனங்களை உமது பகைவருக்குச் சொல்லாது விடுக.§

878. §

திட்டத்தை வகுத்து நிறைவேற்றி, தற்காப்புச் செய்து கொண்டால் எதிரியின் மகிழ்ச்சி மங்கிவிடும்.§

879. §

செடியாக இருக்கும் போதே முள் மரத்தை வெட்டி விடுக. மரமானபின் வெட்ட முற்பட்டால், வெட்டுவான் கரத்தை அதுவே குத்தும்.§

880. §

பகைப்பவரின் செருக்கை அழிக்கத் தவறுபவர் மூச்சு விடும் அளவிற்கும் உயிர் இல்லாதவர் ஆவார். §