Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பகை

851. §

உலகத்து உயிர்கள் ஒன்றுக் கொன்று ஒத்துவராமல் வேற்றுமை விளைவிக்கும் தீய குணமே இகல் எனப்படும் வெறுப்பு ஆகும்.§

852. §

ஒருவன் வேற்றுமையை உருவாக்கி வேண்டுமென்று துன்பம் விளைவித்தாலும் அதை வெறுத்து மீண்டும் தீங்கு செய்யாது விடுதலே சிறந்த நெறியாகும்.§

853. §

காழ்ப்பு எனும் புற்று நோயை அகற்றி விட்டால் எப்பொழுதும் குறைவின்றி மறையாத புகழ் ஒளி வந்து செரும்.§

854. §

துன்பங்களுள் மிகக் கொடிய துன்பமான காழ்ப்பு என்பதை அடக்கினால், மானிடர்க்கு இன்பத்துள் மிக இனிய இன்பம் கிட்டும்.§

855. §

பகைமைகள் யாவற்றையும் துறந்து விட்டோரை வெற்றி கொள்ளக் கூடியவர் யார் உளர்?§

856. §

காழ்ப்பு இனிது எனவீண் பெருமை பேசுவோருக்கு வீழ்ச்சியும் சாவும் விரைவில் வந்து செரும்.§

857. §

காழ்ப்பு நிறைந்து தெரிந்தே பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் மனிதர் தாம் விரும்பும் வெற்றி இறைவன் கருணையால் வருவது என்று அறிவதில்லை.§

858. §

காழ்ப்பிலிருந்து விலகிச் சென்றால் செல்வம் பெருகும். அதற்கு மாறாக வெறுப்புடன் இணைந்து கொண்டால் செல்வம் குறையும்.§

859. §

மனிதர் செல்வம் வருங்காலத்தில் காழ்ப்பைக் காணாது ஒதுக்குவர். ஆனால் கேடு வந்த காலத்தில் மனதில் வெறுப்பைப் பெருக்கி வளர்ப்பர்.§

860. §

வெறுப்பின் அடிப்படையில் கொடிய வேதனைகள் எல்லாம் உருவாகும். மகிழ்வு தரும் நட்பினால் செல்வத்தின் பலன் யாவும் கிட்டும்.§