801. § | பழைமை எனப்படுவது யாதெனின், அஃது இரு நண்பரில் ஒருவர்உரிமையுடன் புரியும் செயல்களுக்கு மற்றவர் மறுப்புத் தெரிவியாதுவிடுதலாகும்.§ |
802. § | நண்பனின் உரிமை கொண்ட ஒழுக்கம் நட்பின் சிறப்பு இலக்கணமாகும். விருப்பத்துடன் அதற்கு இசைவதுஅறியுடையோர் கடமையாகும். § |
803. § | நண்பனின் உரிமையான செயல்களைத் தமதாக ஏற்காவிடின் நெடுங்கால நட்பினால் வரும் பயன் என்ன?§ |
804. § | பழகிய பழக்கத்தால் நண்பர் கேளாது ஏதாவது செய்தாலும்அறிவின் தெளிவுடையோர் கோபிக்க மாட்டார்.§ |
805. § | நண்பர் மனம் நோகும் செயல் யாதும் செய்யும் போது அது அறியாமையாலே, நட்பால் வந்த சிறப்புரிமைகளாகவே எழுந்தனஎனக் கருத்திற் கொள்ள வேண்டும்.§ |
806. § | பழைய நண்பனால் தொல்லைகள்தான் வந்தாலும் உண்மையானநண்பர் அத்தொடர்பை விட்டுவிட மட்டார்§ |
807. § | தமக்கு நண்பராயிருந்தோர் தமக்குக் கேடு தரும் செயல்களைச்செய்யினும் பழைய நண்பர் அன்பு நிறைந்த தொடர்பை விட்டுவிடமாட்டார். § |
808. § | நண்பர் பற்றிப் பிறர் குறைகள் கூறினும் நெருங்கிய நண்பர்அவற்றைக் கேட்க மாட்டார், நண்பர் குற்றம் செய்த போதும் அவர்எதுவும் சொல்லாது விட்டு விடுவர்.§ |
809. § | காலங்கழியினும் உறவு நீங்காத பழைய நட்பைக் கை விடாதநேர்மையுள்ள மக்களை உலகம் என்றும் போற்றி நிற்கும். § |
810.§ | பழைய நண்பரின் உறவை மறக்காதோரை அவரின்பகைவருமே வாழ்த்தி வருவர்.§ |