771. § | எம் எதிரிகளே எம் மன்னனக்கு எதிராகப் போர்புரியாது விடுக. அவ்வாறு துணிந்த பலர் இன்று சுடுகாட்டில் நடுக்கல்லாக நாட்டப்பட்டு நிற்கின்றனர்.§ |
772. § | காட்டு முயலைத் தாக்கிய அம்பை வைத்திருந்ததைவிட யானைக்கு வீசிக் குறி தவறிய வேலைத் தாங்கியது சிறப்புடையது.§ |
773. § | அஞ்சா நெஞ்சமே வீரம் என்று அழைப்பர். தோல்வியுற்றோருக்குக் கருணை காட்டுதல் வீரம் என்னும் வாளின் கூரிய ஓரமாகும்.§ |
774. § | போர்க்களத்தில் தாக்கிய யானை மீது கையிலிருந்த வேலை வீசிய வீரன் தன் மார்ப்பில் புதைந்த வேலைக் கண்டு களிப்புடன் இழுத்து எடுத்துப் பார்த்து மகிழ்வான்.§ |
775. § | பகைவனைச் சீற்றத்தோடு பார்த்த வீரனின் கண்கள், எதிரி தன் கை வேலை வீச இமைத்து விடுமாயின், அது புறங்காட்டி ஓடுதலை ஒக்கும்.§ |
776. § | அஞ்சா நெஞ்சப் போர் வீரன், தன் வாழ்நாளை மீள நோக்கும் போது களத்தில் தன்னுடலில் தழும்புகள் பெறாத நாள்களை வீணாகப் போன நாள்களுள் வைத்தெண்ணுவான்.§ |
777. § | நிலைத்து நிற்கும் புகழை விரும்பித் தன் உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காத வீரனின் கால்களில் கழல் கட்டுதல் அவன் வீரத்தை மெச்சும் அணிகலனாகும்.§ |
778. § | போரில் உயிர் நீக்க அஞ்சா நெஞ்சம் உடையோரைக் களத்திற் செல்வதற்கு மன்னன் மறுத்தாலும் அவர் வீரம் குன்றுவதில்லை.§ |
779. § | தாம் செய்த சபதம் தவறாது மடியும் வீரரை, எவர்தான் தோல்வி அடைந்தவர் என உரைக்கத் துணிவர்?§ |
780. § | மன்னன் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு வீர மரணம் எற்படின், அது மீண்டும் இரங்கிப் பெற்று உயிர் மடியும் தகுதி உடையது.§ |