Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பொருள் செயல் வகை

751. §

மதிக்கப்படாதவரையும் பிறர் மதிக்கச் செய்ய வல்ல பொருள் செல்வம் போல் வேறு ஒன்றும் இல்லை.§

752. §

செல்வம் இல்லாதவரை யாவரும் இகழ்ந்து பேசுவர், ஆயின் செல்வம் உடையாரை சகலரும் புகழ்ந்து பேசுவர்.§

753. §

செல்வம் எனும் அணையாத விளக்கு எல்லா இடத்தும் ஒளி விட்டு இடையூறு என்னும் இருள் அகற்றப்படும்.§

754. §

நல்ல வழியில் தம் திறமையால் ஒருவர் ஈட்டிய செல்வம் அறத்தையும் இன்பத்தையும் தரும்.§

755. §

கருணையும் அன்பும் காட்டாது சேர்க்கப்பட்ட பொருளை ஏற்றுக் கொள்ளாது கை விட்டு விடல் வேண்டும்.§

756. §

உரியவர் இன்றி வரும் பொருளும் வெற்றி கொண்ட பகைவர் பொருளும் சுங்க வரியால் வரும் பொருளும் அரசுக்கு உரிய வருவாய் ஆகும்.§

757. §

அன்பின் வழி விளையும் கருணை என்னும் குழந்தையைப் பேணி வளர்க்கச் செல்வம் என்னும் செவிலித் தாய் அடைய வேண்டும்.§

758. §

கையில் போதிய மூலதனத்துடன் முயற்சியை மேற்கொள்வது மலை உச்சியில் நின்று அடிவாரத்தில் யானைகள் போரிடுவதைப் பார்ப்பதை ஒக்கும்.§

759. §

செல்வத்தைப் பெருக்கிக் கொள்க, பகைவரின் செருக்கை அறுக்கும் கூரிய வாள் அதுவே ஆகும்.§

760. §

நல்வழிப் பெருஞ் செல்வம் படைத்தவருக்குக் கடமை, இன்பம் எனும் பிற இரு செல்வங்களும் எளிதில் கைகூடும்.§