Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அரண்

741. §

படை எடுத்துச் செல்பவர்க்குப் பலமாகவும், பகைவர் தம்மைத் தாக்காது பாதுகாத்துக் கொள்ளவும் உதவுவது மதிற் கோட்டையாகும்.§

742. §

தெளிந்த நீரும், பரந்த வெளியான நிலப் பரப்பும், மலையும், அடர்ந்த காடும் உடையதே சிறந்த அரணாகும்.§

743. §

உயரம், அகலம், உறுதி, பகைவர் தாக்கி அழிக்க முடியாத வலிமை எனும் நான்கு சிறப்பியல்புகளையும் கொண்ட மதிற் கோட்டையையே அரண் என போரியல் நூல்கள் கூறும்.§

744. §

பரந்து விரிந்து நின்று காவல் செய்ய வேண்டிய இடம் சிறிதாய் அழிக்க முயலும் பகைவரை எதிர்த்து நிற்கும் வல்லமை உள்ளதாய் அமைந்தது ஒன்றே அரணாகும்.§

745. §

வெளியிலிருந்து எதிரி தாக்குவதற்குக் கடினமாகவும், தேவையான பொருட்கள் யாவற்றையும் உள்ளதாகவும், அதனுள் இருப்போர் தங்க நல்ல வசதிகள் உள்ளதாகவும் இருப்பது நல்ல அரண்.§

746. §

எதிரி தாக்குவதற்கு கடினமாகவுள்ள காவல் கோட்டை தன்னுள் தேவையான பொருட்கள் எல்லாம் இருப்பினும் எதிரியின் தாக்குதலை முறியடிக்க சிறந்த வீரரையும் பெற்றிருக்க வேண்டும்.§

747. §

பீரங்கியால் தாக்கினாலும் சுரங்க வழியாக உள்ளே செல்ல முயன்றாலும் முற்றுகையிட்டுச் சூழ்ந்தாலும் கைப்பற்ற இயலாதது பலமான அரண் அகும்.§

748. §

பகைவர் எத்துணை கடுமையாகத் தாக்கினாலும் காவல் மிக்க அரணால் போர் புரிவோர்க்குப் பாதுகாப்பும் எதிரிகளுக்குத் தோல்வியும் உண்டாகும்.§

749. §

தொடக்கத்திலேயே போரில் வெற்றி கொள்ள படை வீரருக்கு உதவுவதால் காவல் அரண் பெருமை பெறும்.§

750. §

ஆற்றலுள்ள போர் வீரர் இல்லாவிடின் எத்துணை பாதுகாப்புள்ள காவல் அரணும் பயன்படாது§