Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அவை அஞ்சாமை

721. §

சொல் வன்மை பெற்ற நல்லோர் அறிவுடையோர் சபையின் தரம் அறிந்து வாய் தவறியும் பிழைபடப் பேசார்.§

722. §

தாம் அறிந்ததைக் கற்றவர் சபையில் அவர் மனதைக் கவர எடுத்து உரைக்கும் பேச்சாற்றல் உள்ளவரே கற்றுத் தெளிந்தவருள் சிறந்த கல்விமான் எனக் கொள்ளப்படுவர்.§

723. §

பகைவருக்கு அஞ்சாது போர்க் களத்தில் தம் உயிரை விடக் கூடியவர் பலர் இருப்பர். ஆனால் கற்றவர் சபையில் அஞ்சாது பேசக் கூடியவர் ஒரு சிலரே.§

724. §

கற்றவர் தம் கருத்தை ஏற்கும் வகையில் பேசுவதோடு தம்மிலும் சிறந்த கல்விமான்களிடமிருந்து மேலும் அறிய வேண்டியவற்றையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.§

725. §

சபையோர் கேட்கும் கேள்விகளுக்கு அஞ்சாது விடை அளிக்கத் தர்க்க சாத்திரம் போன்ற நூல்களைக் கற்றுத் தெளிக.§

726. §

வீரம் இல்லாப் பேடிகளுக்கு வாளால் என்ன பயன்? அறிவுடையோர் சபையைக் கண்டு அஞ்சுபவருக்குப் புத்தகங்களால் என்ன பயன்? §

727. §

சபையோர் மத்தியில் பேச அஞ்சுபவனின் கல்வி, பகைவர் மத்தியில் அகப்பட்ட பேடியின் கையில் கூரிய வாள் இருத்தலைப் போன்றது.§

728. §

நன் மக்கள் கூடிய சபையில் நல்ல முறையில் பேசத் தெரியாதவர் பல்வேறு நூல்களைப் படித்தும் ஒரு பயனுமில்லை.§

729. §

சகல நூல்களையும் கற்றுத் தெளிந்த நன் மக்கள் சபையில் பயன் தரும் வகையில் பேச அஞ்சுபவர் கல்லாதவரிலும் கீழானவர்.§

730. §

சபையோர் மத்தியில் பேச அஞ்சி கற்றதை அவர்களுக்கு எடுத்துக் கூறத் தெரியாதவர் உயிரோடு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?§