Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

செயலில் உறுதி

661. §

செயலில் உறுதி என்பது உண்மையில் மன உறுதியே. அஃது ஏனய உறுதிகளைப் போல் இல்லாமல் தனி இயல்பு உடையது.§

662. §

தோல்வியில் முடியும் எனத் தேர்ந்த செயல்களைத் தவிர்த்தலும், அவ்வாறு நேர்ந்தாலும் மனம் தளராது இருத்தலும் தெளிந்த மதி உடையோர் சொல்லும் செயல் முறையாகும்.§

663. §

செய்யுங் கருமம் முற்றாக முடிந்த பின் தெரிவித்தலே செயல் உறுதி. அதை இடையிலே தெரிவித்தல் முடிவில்லாத துயரந் தரும்.§

664. §

ஒரு திட்டத்தை எடுத்துக் கூறல் எளிது, ஆயின் கூறியதை நடைமுறையில் செய்து முடித்தல் உண்மையில் கடினம்.§

665. §

ஒழுக்க நெறியில் வழுவாதவரின் செயலாற்றும் வல்லமை மன்னனாலும் மக்களாலும் போற்றி மதிக்கப்படும்.§

666. §

எண்ணியபடி செயலாற்றும் மனவுறுதியை எண்ணுவோர் பெற்றிருப்பின் எண்ணியவாறு அவர் எண்ணங்கள் நிறைவேறும்.§

667. §

சிறிய உருவம் கண்டு ஒருவரை ஏளனம் செய்யத்தகாது. ஏனெனில் அவர் பெரிய தேருக்கும் இன்றியமையாத சிறு அச்சாணி போன்றவர்.§

668. §

மேற்கொள்ளும் செயல்களைக் கலக்கம் இல்லாது மனத் தெளிவுடன் ஆய்ந்த பின் காலந்தாழ்த்தாது துணிவுடன் நிறைவேற்றுக.§

669. §

சொல்லொணாத் துன்பங்கள் வந்து சேரினும், துணிவை இழக்காது முடிவில் உள்ளத்துக்கு இன்பந் தரும் செயல்களைப் புரிக.§

670. §

செயலில் உறுதி இல்லாதவர் வேறு ஆற்றல்கள் பல பெற்றருப்பினும் அவரை உலகம் விரும்பி ஏற்காது.§