Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

செயலில் சுத்தம்

651. §

நல்லவர் நட்பு மனிதனுக்குச் செல்வம் தரும் ஆனால் நற்செயல்கள் அவன் விரும்புவது எல்லாம் தரும்.§

652. §

உண்மையில் நன்மையும் புகழும் பயவாத சொற்களை எப்பொழுதும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.§

653. §

வாழ்வில் தம் எதிர்காலம் சிறக்கும் என விரும்பி தம் புகழுக்குக் கேடு தரும் செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.§

654. §

மனம் கலங்காத தெளிந்த நோக்கு உடையோர் எந்த இக்கட்டான நிலைமையிலும் வெட்கம் அல்லது இழிவு தரும் செயல்களைச் செய்யமாட்டார்.§

655. §

"என்ன செய்து விட்டேன" என்று பின் வருந்தும் செயல்களைப் புரியாது விடுக. மறந்தும் அவ்வாறு செயதிருந்தால் மீண்டும் அவை போன்றவற்றைச் செய்யற்க.§

656. §

பெற்ற தாய் பசிப்பிணியால் வாடுவதைக் காணினும் சான்றோர் கடிந்து ஒதுக்கிய செயல்களைப் புரியாது விடுக.§

657. §

நல்லனவே செய்து நல்லவர் அடையும் மிகக் கொடிய வறுமை, இழிவான செயல் புரிந்து அடையும் மிகுந்த செல்வத்திலும் பெறுமதியானது.§

658. §

தீய செயல்கள், எவ்வாறு நிறைவேற்றப்படினும், அவற்றைக் கைவிடாது நாடி நடப்பவர்க்குத் துன்பமே கொடுக்கும்.§

659. §

பிறர் அழப் பெற்ற செல்வத்தைத் தான் அழுது கொண்டே இழக்க நேரிடும். தூய வழியில் பெற்ற செல்வம், முதலில் நட்டம் தந்திருப்பினும் இறுதியில் நற்பலன் பல நல்கும்.§

660. §

தீய வழியில் பொருள் சேர்த்து நாட்டைக் காப்பாற்றுதல் பச்சை மண் பானையில் நீருற்றிக் கசியாது காக்க முயல்வது போலாகும்.§