Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

சொல்வன்மை

641. §

மனிதனுக்குக் கிடைக்கும் அரும் பேறுகளுள் சொல்லாற்றலே எல்லாவற்றிலும் சிறப்புடையது.§

642. §

சீரும் கேடும் பேசும் சொல்லில் இருந்து தோன்றுவதால் பேசும் சொல்லில் குற்றமில்லாது காத்து உரைத்திடுக.§

643. §

சாதுரியப் பேச்சு நண்பர்களை வயப்படுத்தி மயக்கி நிற்கச் செய்யும். அதன் திறனால் பகைவருமே மருண்டு போவர்.§

644. §

கேட்போர் இயல்பைச் சீர்தூக்கி அதற்கு ஏற்ப பேசுக, இதனிலும் மிகச் சிறப்பு அல்லது பெறுமதி உள்ளது எதுவுமே இல்லை.§

645. §

செல்வதை வேறு காரணம் காட்டி மறுக்க முடியாது என்று உறுதிப் படுத்திக் கொண்டு அதன் பின் சொல்லக் கருதியதை உரைத்து விடுக.§

646. §

கேட்போர் மேலும் கேட்க விரும்பும் வகையிலும் ஏனையோர் கருத்துகளை உணர்ந்து பயன் பெறும் வகையிலும் பேசுதல் குற்றமற்ற பெரியோரின் இலட்சியங்கள் ஆகும்.§

647. §

சொற்போட்டி நிகழும் போது அச்சம் அல்லது மறதி இன்றி மனம் கவரப் பேச வல்லாரை எவரும் வெற்றி கொள்ள இயலாது.§

648. §

பொருத்தமும் கவர்ச்சியும் அமைய ஆற்றல் மிக்க பேச்சு உள்ளவரைக் கண்டால் உலக மக்கள் விரைவில் அவனைச் சூழ்ந்து நிற்பர்.§

649. §

குற்றமற்ற சொற்கள் சிலவே சொல்லி விளங்க வைக்கத் தெரியாதவர் அதிகப் பேச்சில் மோகங் கொள்ளுவர்.§

650. §

தாம் அறிந்தவற்றைப் பிறருக்கு விளங்கப் பேசத் தெரியாதவர் நறுமணம் வீசாத பூங்கொத்தைப் போல்வர்.§