Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அமைச்சு

631. §

ஒரு அரிய காரியத்தைக் கருத்தில் கொண்டு அதற்குரிய செயல் முறை, கருவி, காலம், என்பனவற்றை முறையாகச் தேர்ந்த பின் அதனை நிறைவேற்றபவனே சிறந்த அமைச்சன்.§

632. §

மேற்கூறிய ஐந்துடன் தளராத மனவுறுதி, குடிகளைக் காத்தல், நீதி நூல்களைக் கற்றுத் தெளிதல், செயற்திறன் என்பன நிறையப் பெற்றவனே அமைச்சனாவான்.§

633. §

எதிரிகளுள் பிளவு ஏற்படுத்தல், நண்பரை அணைத்துக் கொள்ளல், பிரிந்து சென்றவரை ஒற்றுமைப்படுத்தல் ஆகிய செய்ய வல்லவனே தகுந்த அமைச்சனாவான்.§

634. §

ஒரு காரியத்தைச் நன்கு சிந்தித்து அறிந்து, மற்றோரையும் திறமையுடன் ஏவி அதனைச் செவ்வனே நிறைவேற்றுபவனே அமைச்சராவான்.§

635. §

அறநெறி அறிந்தவனாகவும், நிலைமைக்கேற்ப யுக்திகளை வகுத்துக் கொள்பவனாகவும், கற்றுத் தெளிந்த அறிவுரைகளைக் கூற வல்லவனாகவும் உள்ளவனே உற்ற துணையாவான்.§

636. §

கூரிய புத்தியும் தேர்ந்த கல்வியறிவும் கலந்து கைகூடிய நிகரில்லா நுட்பத்தை எதிர்க்க வல்லார் யாருளர்?§

637. §

நூலறிவால் நுட்பவழிகளை நிறையவே கற்றிருந்தாலும் உலக நடை முறைகளை ஆழ்ந்து அறிந்த பின்பே செயலாற்றல் வேண்டும்.§

638. §

நற்கருத்துகளுக்குச் செவி சாயாமல் அறியாமை மிகுந்த அரசன் ஆனாலும் அவனுக்கு அறிவுரை கூறுபவதே நம்பிக்கை மிக்க அமைச்சனின் கடமையாகும்.§

639. §

பக்கத்து இருந்து சதி செய்யும் ஓர் அமைச்சரை வைத்துக் கொள்வதை விட எழுநூறு கோடி பகைவரை எதிர்த்து நிற்பதே உகந்ததாகும்.§

640. §

குறையில்லா திட்டத்தை வகுக்க வல்லமை பெற்றவராயினும் செயலை நிறைவேற்றும் ஆற்றலற்றவர் தம் கருமத்தை என்றுமே முடிப்பதில்லை.§