Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கொடுங்கோல் ஆட்சி தவிர்த்தல்

561. §

பாரபட்சமின்றி ஆராய்ந்து பின் அக்குற்றத்தை மீண்டும் வரவிடாது தண்டிப்பவனே சிறந்த மன்னனாவான்.§

562. §

தம் செல்வம் தம்முடன் நெடுங்காலம் நிலைத்திருக்க விரும்பும் அரசன் தண்டிக்கும் கோலை ஓங்கி உயர்த்தினாலும் அதனை மெதுவாக தண்டனை அளவு மீறாமல் விழச்செய்வான்.§

563. §

குடிகளைக் கலக்கிக் கொடுங்கோல் புரிபவன் தவறாது
நிச்சயம் இறந்து போவான்.
§

564. §

எங்கள் அரசன் கொடியவன் என மனம் நொந்து மக்கள் உரைப்பின் அவன் செல்வம் விரைவில் அழிவதோடு அவன் ஆயுளும் குன்றிவிடும்.§

565. §

இரக்கமற்ற முகபாவத்தையும் காண்பதற்கு அரியவனாயுமுள்ள அரசன் கைப்பட்ட செல்வம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் பேயிடமிருக்கும் செல்வம் போல் பயனற்றது.§

566. §

கருணை இல்லாதவனாயும் கடுஞ்சொல் பேசுபவனாயும் உள்ள அரசனின் பெருஞ்செல்வம் நெடுங்காலம் நிலைக்காது அழிந்து விடும்.§

567. §

கடுஞ் சொல்லும் குற்றத்துக்கு மிக்க தண்டனையும் அரசனின் வெற்றியீட்டும் வலிமையைத் தேய்க்கும் அரம் போன்றவை.§

568. §

கண்ணும் கருத்துமாய்க் கலந்துரையாடாமல் அமைச்சரைச் செயலாற்ற விட்டுப் பின் கொதித்தெழுந்து குற்றங்காணும் அரசன் செல்வம் சுருங்கும்.§

569. §

போர் வருமுன்பே அதற்கு வேண்டிய பாதுகாவலை மேற்கொள்ளாத அரசன் மனக் கலக்கமுற்று விரைவில் கெட்டுப் போவான்.§

570. §

கொடுங்கோல் செலுத்தும் மன்னன் தனக்கு அறிவுரை கூற நியமிக்கும் மூடர்களைவிட பூமாதேவிக்கு பாரமான சுமை வேறில்லை.§