541. § | தீர ஆராய்ந்து எப்பக்கமும் பாரபட்சம் காட்டாது நடுவு நிலைமையிலிருந்து வழுவாது விதிக்கப்பட்ட சட்டப்படி தீர்வு கொடுத்தலே நீதி நெறியாகும்.§ |
542. § | ஞாலம் முழுவதும் மழையை நம்பி வாழ்வது போல் மக்கள் யாவரும் மன்னனின் செங்கோல் ஆட்சியை நம்பி வாழ்வர்.§ |
543. § | அந்தணர் இயற்றிய வேத நூல்களுக்கும் அவற்றில் கூறிய அறநெறிகளுக்கும் ஆதாரமாக அமைவது அரசனின் நீதி நெறிப்படியான ஆட்சியாகும்.§ |
544. § | தன் குடிமக்களை அன்புடன் தழுவி அறநெறிப்படி செங்கோல் செலுத்தும் பேரரசின் மன்னன் அடிகளை உலகமே போற்றி நிற்கும்.§ |
545. § | தன் குடைக்கீழ் நல்வழியில் செங்கோல் செலுத்தும் மன்னன் நாட்டில் பருவ மழை தப்பாது பயிர் விழைச்சலும் பெருகும்.§ |
546. § | மன்னன் செலுத்திவரும் கோணாத செங்கோல் மூலமன்றி வேலால் பெறப்படுவது அன்று வெற்றி.§ |
547. § | மன்னன் உலகம் எல்லாம் பாதுகாப்பான், ஆனால் அவனைக் கோணாத செங்கோலே பாதுகாக்கும்.§ |
548. § | முறைப்பாட்டுடன் வரும் மக்கள் நேர்முகம் காண்பதற்கு அரியவனாகி ஆராயாது நீதி வழங்கும் மன்னன் தன் தவறினால் தானே கெட்டுப் போவான்.§ |
549. § | மக்களைப் பிறர் துன்புறுத்தாது காப்பாற்றிச் செய்யுங் குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல் பழிக்குரிய பாவமாகாது. அது மன்னனுடைய கடமையாகும்.§ |
550. § | மன்னன் கொலைகாரப் பாதகர்களுக்கு சிரச்சேதத் தண்டனை விதித்தல் தோட்டக்காரன் வீண்களையை நீக்கி நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பாகும்.§ |