Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கவனக் குறைவு தவிர்த்தல்

531. §

அளவுக்கு மீறிய மகிழ்ச்சியால் வரும் கெடுதல்கள் கடுங் கோபத்தினால் வரும் தீமையையும் மீறியதாகும்.§

532. §

நித்திய வறுமை அறிவினைப் படிப்படியாகச் சிதைப்பது போல் அடிக்கடி தோன்றும் ஞாபகமறதி ஒருவன் புகழை அழித்துவிடும்.§

533. §

ஞாபக மறதி உள்ளவனுக்கு புகழ் இல்லை என்பது உலகின்கண் உள்ள நூல்கள் அனைத்தும் உரைக்கும் முடிவாகும்.§

534. §

அச்சத்துக்குள்ளாகி வாழ்பவனுக்கு எவ்விதக் காவலிருந்தும் பயனில்லாதது போல் கவனக் குறைவு உள்ளவனுக்குச் செல்வமிருந்தும் ஏது பயனுமில்லை.§

535. §

துன்பம் வந்து சேரு முன்பே காவல் செய்யாது மறந்து விடுபவன் அது பின் தோன்றும் போது தன் பிழையை எண்ணி எண்ணி வருந்துவான்.§

536. §

எக்காலமும் எல்லோரிடமும் கவனத்துடன் காட்டும் கண்காணிப்புக்கு ஒப்பானது வேறெதுவுமில்லை.§

537. §

விழிப்பாக இருந்து தன் கடமையை நிறைவேற்றுவோருக்கு கடிதெனக் கூறத்தக்க கருமம் எதுவுமில்லை.§

538. §

மக்களால் போற்றப்படும் செயல்களைப் புரிதல் வேண்டும். மறந்து அவ்வாறு செயலாற்றாது விடின் அது ஏழு பிறப்புந் தீராத துன்பந்தரும்.§

539. §

மகிழ்ச்சியால் மக்கள் மருண்டு போகும் எல்லாவேளையும் ஞாபக மறதியால் அழிந்த மக்களை நினைவு கூர்தல் வேண்டும்.§

540. §

நினைத்ததை மறதியின்றி நினைவில் வைக்கும் ஆற்றலைப் பெறின், நினைத்தது கைகூடுதல் எளிது.§