521. § | ஒருவன் செல்வத்தை இழந்து வறியவனாயினும் அவன் உற்றார் உறவினர் மட்டுமே அவனோடு பழைய நட்புரிமை காட்டி வருவர்.§ |
522. § | ஒருவனுக்கு அன்பு சற்றேனும் குறையாத உற்றார் உறவினர் பொருந்துவராயின் அவனுடைய செல்வம் குன்றாது நிலைபெற்றிருக்கும்.§ |
523. § | கரை இல்லாத குளம் நீர் நிறைந்தால் வழிந்தோடும். அது அன்பால் அணைக்கும் சுற்றமில்லாதார் வாழ்க்கை போன்றது.§ |
524. § | ஒருவன் தன் உறவினர் தன்னைச் சூழ்ந்து வாழத்தக்க வகையில் ஒழுகுதலே அவன் செல்வத்தால் பெற்ற பெரும் பயனாகும்.§ |
525. § | தாராளமாகக் கொடுத்தும் இனிய சொல்லால் உரையாடியும் வரும் நற்பண்பு மிக்கவனின் உறவினர் அவனைச் சூழ்ந்து வாழ்வர்.§ |
526. § | கொடைவள்ளலாகவும் சற்றேனும் சினக்காதவனாகவும் ஒருவன் வாழ்வானாயின் அவனைப் போல் உறவினர் பெற்றிருப்பவர் இவ்வுலகில் வேறு யாருமில்லை.§ |
527. § | காகம் போல் காணும் உணவைத் தன் இனத்தோடு கலந்து பகிர்ந்து உண்ணும் குணமுள்ளவரிடமே செல்வம் நீங்காது நிலைத்திருக்கும்.§ |
528. § | மன்னவன் யாவரையும் பொதுப்பட ஒருதன்மையினராய்க் கணியாது அவரவர் தகுதிக்கு ஏற்பக் கணித்து வருவானாயின் அச்சிறப்பைக் கண்டு அவனைச் சூழ்ந்து பலர் வாழ்வார்.§ |
529. § | உளம் நொந்து பிரியும் உற்ற உறவினர், அவ்வாறு பிரிதற்குரிய காரணம் நீங்கியதும் தாமே வந்து கூடுவர்.§ |
530. § | தன்னோடு முன் இணைந்திருந்து பிரிந்தவன் பின் தகுந்த காரணத்துடன் திரும்பி வந்தால் அரசன் தீர ஆராய்ந்த பின்னே மீளவும் அவனுடன் தொடர்பு கொள்ளலாம்.§ |