Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தொழில் புரிவோரைத் தேர்ந்தெடுத்தல்

511. §

நல்லதையும் தீயதையும் தீர ஆராய்ந்து நல்லதையே நாடிச் செயலாற்றுபவனை பணிபுரிபவனாக அமர்த்திக் கொள்.§

512. §

வருவாய் வளர்வதற்குரிய சீரிய வழிவகைகளையும் இடையூறுகளையும் ஆராய்ந்து செவ்வனே செயலாற்றுபவனை பணியாளனாக அமர்த்துக. §

513. §

அன்பு, அறிவு, மனத்தெளிவு, அவாவின்மை எனும் இந்நான்கு பண்புகளையும் சிறப்புற உடையவனே நம்பத்தகுந்தவன்.§

514. §

எல்லா நிலைமைகளிலும் தெளிவுடையோர் எனக் கணிக்கப்பட்டிருப்பினும் செயலாற்றுங்கால் வேறுபடும் மக்கள் சிலரல்லர், மிகப்பலர்.§

515. §

ஒருவரின் ஆற்றலையும் அயராத ஊக்கத்தையும் அளவுகோலாகக் கொண்டன்றி அவன் மீதுள்ள பந்தபாசத்தின் அடிப்படையில் பணிகளை ஒப்படைத்தலாகாது.§

516. §

செய்தொழிலின் இயல்பை அறிந்து, செவ்வனே செய்பவனைத் தெர்ந்தெடுத்து, செயலாற்றுவதற்கான காலத்தைக் கவனமாகக் கணித்த பின் செய்தொழிலைத் தொடங்க வேண்டும்.§

517. §

இவன் இத்தொழிலை இம்முறையில் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவன் என்பதை அறிந்த பின், அதில் பின் தலையிடாது அவன் அதைச் செய்து முடிக்க விட்டு விடுக.§

518. §

ஒருவனுக்கு எத்தொழில் பொருத்தமானது என்பதை நன்கு அறிந்த பின் அவனுக்கு அவ்வகையில் அமையும் பணியை ஒப்படைக்கவும்.§

519. §

தொழிலை ஒப்படைத்தவர் மீது அவர் தம் தொழிலாளிகள் காட்டும் நட்புப் பண்பைத் தவறாக நினைத்தால் செல்வன் அவரை விட்டு நீங்கும்.§

520. §

நாடாளும் மன்னன் தன் பணியாளரின் செயல்களை நாள் தோறும் உற்றுக் கவனித்தல் வேண்டும். அவர்கள் செவ்வனே செயலாற்றினால் இவ்வுலகமே பிழைபடாது நல்வழியில் ஒழுகும்.§