Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தெரிந்து தெளிதல்

501. §

அறம், பொருள், இன்பம், உயிருக்கு உண்டாகும் ஆபத்து என்ற இந்த நால்வகை இயல்புகளின் திறத்தைத் தீர ஆராய்ந்து உணர்ந்தவனையே பணியில் அமர்த்த வேண்டும்.§

502. §

நல்ல குடும்பத்திற் பிறந்து குற்றம் எதுவும் செய்யாமல், பழிபாவங்களுக்கு அஞ்சும் இயல்புடையவனையே நம்பிக்கையுள்ளவனாகத் தேர்வு செய்து கொள்ளல் வேண்டும்.§

503. §

படிப்பதற்கரிய நூல்களைக் கசடறக் கற்று நற்குணமுள்ளோரிடத்தும் நுணுகி ஆராய்ந்து நோக்கின் சற்றேனும் அறியாமை இல்லாமல் போகாது.§

504. §

ஒருவனிடத்துக் காணப்படும் நற்குணங்களையும் குற்றங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றுள் மிகைபட உள்ள குணத்தாலேயே அவரை மதிப்பிடுக.§

505. §

ஒருவரை மக்கள் போற்றும் குணநலன்களுக்கும் தூற்றும் ஒழுக்கக் கேடுகளுக்கும் உரைகல்லாக அமைவது அவரவர் செயல்களே ஆகும்.§

506. §

உற்றார் உறவினர் இல்லாதாரைப் பேணிப் பழகுவதை ஒழித்துக் கொள்க, அவர்கள் உலகத்தோடு ஒட்டி வாழாதவராயின் எவ்வித பழிச் செயலிலும் ஈடுபடத் தயங்க மாட்டார்.§

507. §

அறியவேண்டியனவற்றை அறியாதவரை அன்பின் விளைவாக நம்பிக்கை வைத்து ஒழுகுதலால் எல்லா விதமான அறியாமையும் வந்து சேரும்.§

508. §

அறியாத ஒருவனை ஆராயாது ஒருவர் தொடர்பு கொண்டால் அவருக்கு மட்டுமல்ல வாழையடி வரும் அவர் சந்ததிக்கும் தீராத துன்பம் வந்து கொண்டிருக்கும்.§

509. §

எவரையும் பற்றி ஆராய்ந்து அறியாது நம்பிக்கை கொள்ளலாகாது. அவரை தெளிந்து அறிந்த பின்பும் நம்பக் கூடிய காரியங்களை மட்டுமே அவரிடம் ஒப்படைத்து விடுக.§

510. §

ஆராய்ந்து அறியாது ஒருவர் மீது நம்பிக்கை கொள்வதும் அவ்வாறு ஏற்றுக் கொண்டவர் மீது சந்தேகப்படுவதும் தீராத துன்பம் வரும்.§