Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

குற்றம் தவிர்த்தல்

431. §

செருக்கு, சினம், சிறுமை எனுங் குற்றங்களில்லாதார்
பெறும் பெருமை மேம்பட்ட தன்மையது.
§

432. §

அளவுகடந்த ஆசை, செருக்கு, விரும்பத்தகாத மகிழ்ச்சி என்பன
தகுதியற்ற மன்னனின் குறைகளாகும்.
§

433. §

பழிச் சொல்லுக்கு அஞ்சித் தம் குற்றத்திற்காக வெட்கப்படுபவர்
தினையளவு குற்றம் வரினும் அதனைப் பனையளவான பெருங்
குற்றமாகக் கொள்வர்.
§

434. §

தான் செய்யும் குற்றம் இறுதியில் தனக்கே அழிவைத் தருவதால்
அக் குற்றம் தன்மீது வராது காத்துக் கொள்க.
§

435. §

குற்றம் வருமுன் தன்னைக் காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு
முன் இடப்பட்ட வைக்கோற் போர் போல் சாம்பலாகிவிடும்.
§

436. §

தன் மீதுள்ள குற்றங்களை முதலில் நீக்கிப் பின் பிறர் மீதுள்ள
குற்றங்களைப் போக்கும் அரசனுக்கு என்ன குற்றங்கள் ஏற்பட
முடியும்?
§

437. §

செய்ய வேண்டியனவற்றைச் செய்யாது சேர்த்து வைப்பவனின்
செல்வம் பெருகாது வீணே அழிந்து விடும்.
§

438. §

பேராசையினால் பொருளைத் தகுந்தவிடத்து உதவாத
உலோபத்தன்மை பிற குற்றங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய
குற்றமாகும்.
§

439. §

எக்காலத்தும் தன்னைத் தானே வியந்து புகழ்ந்து
கொள்ளலாகாது, அவ்வாறே பிறருக்கு நன்மை தராத
செயல்களைச் செய்யலாகாது.
§

440. §

தான் விரும்புவனவற்றைப் பிறர் அறியாத வகையில் ஒருவன்
அனுபவிப்பானாயின் பகைவர் தம் சூழ்ச்சிகள் பாழாகிப் போய் விடும்.
§