Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அறிவு உடைமை

421. §

அழிவைத் தடுக்க வல்ல ஓர் ஆயுதம் அறிவு ஆகும். மேலும் அது பகைவராலும் அழிக்க முடியாத காவற்கோட்டை ஆகும்.§

422. §

மனத்தை அடக்கி ஆளவல்லது அறிவு, தீய வழியிற் செல்ல விடாது திரும்பி நல்ல வழியிற் செலுத்துவதும் அறிவே.§

423. §

எவரெவர் வாயிலிருந்தாவது என்னென்ன விடயத்தை அறியினும் அவ்வவ் விடயத்தின் உண்மைப் பொருளை அறிவானது காணும்.§

424. §

தாம் சொல்லுங் கருத்தை எளிதில் விளங்குமாறு தெளிவாகச் சொல்லுதலும் பிறர் சொல்லுங் கருத்தின் நுண்ணிய பொருளைக் கூர்ந்து அறிந்து கொள்ளுதலும் அறிவின் பாற்பட்டதாகும்.§

425. §

அறிவாற்றல் மிக்கோரை அணைத்து நண்பராக்கித் தாமரை போல் மலர்தலும் கூம்புதலுமின்றி ஒரே தன்மையராக வாழ்வது அறிவாகும்.§

426. §

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறே அதனுடன் ஒத்து ஒழுகுவது அறிவுடைமை ஆகும்.§

427. §

அறிவுடையார் பின் நிகழ்வனவற்றை முன்னதாகவே உணர வல்லவர். அறிவிலார்க்கு அத்தகைய ஆற்றல் எத்துணையும் இல்லை.§

428. §

அஞ்ச வேண்டியனவற்றிற்கு அஞ்சாது பாராமுகமாயிருத்தல் மடமையாதலின் அறிவுடையோர் அஞ்ச வேண்டியனவற்றிற்கு அஞ்சி அதைத் தடுக்க முயல்வர்.§

429. §

பின் விளைவுகளை உய்த்துணர்ந்து அவற்றிற்குத் தக ஏற்பாடுகள் செய்வோர்க்கு அதிர்ச்சி தரக் கூடிய துன்பம் ஏதும் வாராது.§

430. §

அறிவுடையவர்கள் எல்லாம் பெற்ற சிறப்புடையவராவர். அறிவில்லாதவர் எல்லாம் பெற்றிருப்பினும் எதுவுமே இல்லாதவர் போல்வர்.§