Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கல்லாமை

401. §

நிறைவாகக் கற்றுத் தெளிந்த அறிவின்றிக் கற்றோர் அவையில் பேச முற்படுதல் சதுரங்கக் கோடின்றித் தாயக்கட்டை உருட்டுவது போலாகும்.§

402. §

கல்வியறிவில்லாதவன் சொற்பொழிவாளனாக விரும்புதல் முலை இரண்டு மில்லாத பெண் தாய்மையை விரும்பியது போலாகும்.§

403. §

கற்றோர் சபையில் கல்வியறிவில்லார் பேசுவதைத் தவிர்ப்பாராயின், அவர்களும் உயர்வான தகுதிக்குரியவராவர்.§

404. §

கல்லாதவன் எத்துனை மதிநுட்பம் வாய்ந்தவனாக இருப்பினும், அறிவுடையோர் அவன் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்.§

405. §

கல்வியறிவில்லாதவன் கற்றோர் அவையிற் பேச உந்தும் தற்பெருமையானது, அவன் கற்றோருடன் உரையாடக் காய்ந்து சுருங்கி விடும்.§

406. §

கல்வியறிவில்லாதவர் பயிர் எதுவும் விளையாத உலர் நிலத்தைப் போல்வர். அவர் உயிரோடு இருக்கின்றனர் என்று மட்டும் தான் கூற முடியும்.§

407. §

மதிநுட்பமும் கூர்மையும் அற்றவனின் கவர்ச்சியான தோற்றமும் அழகும் களிமண்ணால் செய்து நிறந் தீட்டிய பாவையின் அழகைப் போன்றது.§

408. §

கல்விமான் ஒருவன் அடைந்துள்ள வறுமையை விட கல்லாதான் பெற்ற செல்வம் கொடியது.§

409. §

உயர்குடிப் பிறந்தும் கல்வி கல்லாதானை விட கீழ்குடிப் பிறந்தும் கற்றறிந்தவனின் பெருமை மேம்பட்டது.§

410. §

மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள தொடர்புகள் போன்றதே வேத நூலறிவு பெற்ற ஞானியர்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பாகும்.§