Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அரசன் பெருமை

381. §

படை, குடிமக்கள், செல்வவளம் இடிந்துரைக்கும் மந்திரிமார், உற்றவிடத்து உதவும் நண்பர், அரண் என்பன ஆறும் நிறைவுற உடையவன் அரசருள் ஆண் சிங்கமாம்.§

382. §

பகையின்மை, தாராள மனப்பான்மை, கூரிய புத்தி, விடாமுயற்சி எனும் இந்நான்கு குணமும் குறையாதிருப்பது அரசர்க்கு இன்றியமையாதவை.§

383. §

நாடாளும் அரசர்க்கு சோரா விழிப்புநிலை, நற்கல்வி, மனத்துணிவு என்பன மூன்றும் தவறாது நிலைத்திருக்க வேண்டிய குணங்களாம்.§

384. §

அறநெறியில் வழுவாமலும் மடச்செயலுக்கும் இடங்கொடாமலும் வீரத்தில் சிறிதும் தயங்காதவனாயும் ஆளுபவன் மதிப்புக்குரிய அரசனாவான்.§

385. §

செல்வத்தைச் சேர்த்தலிலும், சேர்த்தனவற்றைச் சேமித்து வைத்தலிலும், சேமித்தவற்றை பாதுகாத்தலிலும் அவற்றை உரியவாறு பங்கீடு செய்தலிலும் வல்லவனே அரசன்.§

386. §

குடிமக்கள் எளிதில் காணக் கூடியவனாயும் இன்சொல் பேசுபவனாயும் ஆளும் அரசனுடைய நாட்டை உலகம் போற்றும்.§

387. §

இன்சொல் பேசி தாராளமாக உதவியளித்து ஆற்றலுடன் நாட்டைக் காக்கும் அரசன் சொல்லை உலகம் கட்டளையாக ஏற்றுக் கொள்ளும்.§

388. §

நீதி நெறியில் வழுவாது குடிமக்களுக்குத் துன்பம் வராது காக்கும் மன்னவன் மக்களால் தெய்வமாக மதிக்கப்படுவான்.§

389. §

செவிக்கு அன்னாத சொற்களைப் பொறுத்து முறை தவறாப் பண்பு மிக்க அரசன் மக்களால் தெய்வமாகக் கணிக்கப்படுவான்.§

390. §

தாராளமான கொடை, அருளுடைமை, நீதிநெறி வழுவாமை குடியோம்பல் எனும் நான்கு பண்புகளையும் உடையவன் மன்னர்களுள் சோதி போல் விளங்குவான்.§