371. § | ஒருவனுக்கு செல்வம் சேர வேண்டிய ஊழ் இருப்பின் முயற்சி தோன்றும். அச்செல்வம் அழிவதற்கான ஊழ் வரின் சோம்பலைத் தூண்டும்.§ |
372. § | ஒருவன் திரட்டிய செல்வத்தை அழிக்கும் ஊழ் வந்துறும் போது, அது அறிவைப் பேதலிக்கச் செய்யும். செல்வம் திரளவேண்டிய ஊழ் வருங்கால் அவன் அறிவை வளர்க்கும்.§ |
373. § | நுண்ணறிவூட்டும் நூல் பல ஒருவன் கற்றிருப்பினும் ஊழ் வந்துறும் போது அவ்வூழால் ஆகும் இயற்கை அறிவே வளரும்.§ |
374. § | உலகம் இயல்பாக இரு வேறுபட்ட தன்மைகளை உடையது. திரண்ட செல்வமுடையராதல் ஒன்று, தெளிந்த அறிவுடையராதல் மற்றொன்று.§ |
375. § | ஊழானது தீய சூழ்நிலையிலும் நன்மை அளிப்பதாக மாறச், செல்வம் சேரும். அவ்வாறின்றி நல்ல சூழ்நிலையும் தீயதாய் மாறச், செல்வம் அழியும்.§ |
376. § | ஊழ் விதிப்படி சேராத செல்வம், எத்துணை காவல் செய்யினும் நிலையாது. தமக்கு உரியதாயுள்ளதை அழிய விடினும் அது குறையாது.§ |
377. § | ஒருவன் கோடிக்கணக்காகச் சேர்த்து வைத்திருந்தாலும் அவன் தலைவிதிப்படியான வகைப்படியே அதனை அனுபவித்தல் கூடும்.§ |
378. § | வாழ்வில் வரக் கூடிய துயரங்கள் கர்ம வினைப்படி வந்து வருத்தாவிடின் வறுமையால் வாடுபவர் துறவிகள் போலாவர்.§ |
379. § | ஊழ்வினையால் நன்மை வரும் போது களிப்புடன் அனுபவிப்பவர் அதே ஊழ்வினை தீயன விளைக்கும் போது அழுவது ஏனோ?§ |
380. § | ஊழ் வினையிலும் வலியது எது உளது? அதனைத் தவிர்க்கும் உபாயத்தை மேற்கொள்ளினும் இது தானே முந்தி வந்து விடும்.§ |