Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

உண்மை உணர்தல்

351. §

மெய்ப் பொருள்ல்லாதவற்றை மெய்ப்பொருளென்று தவறாக நினைக்கும் மயக்க உணர்வே துன்பம் நிறைந்த இழிபிறவிகளுக்குக் காரணமாகும்.§

352. §

அறியாமை நீக்கி மயக்கமில்லா உண்மை நிலையைக் கண்டறிந்த சான்றோரிடத்தில் பேரானந்தம் கூடும்.§

353. §

ஐயப்பாடு எதுவுமின்றி மெய்ப்பொருள் தெளிந்த அறிவுடையார்க்கு விண்ணுலகம் மண்ணுலகிலும் மிகக் கிட்டியதாயிருக்கும்.§

354. §

மெய்யுணர்வு கைவரப் பெறாதவர்க்கு ஐம்புலன்களாலும் அறியப்படும் பரந்த உலகியலறிவும் பயனற்றதாகிவிடும்.§

355. §

எப் பொருளும் எத்தனை இயல்புடையதாயினும் அவ்வப் பொருளின் உண்மை இயல்பை உணருவதே மெய்யுணர்வாகும்.§

356. §

இம்மையிலே உண்மை நிலை அறிந்தவர் மீண்டும் பிறவி எடுக்க வேண்டாத பெருவாழ்வு வாழ்வர்.§

357. §

தெளிவாகச் சிந்தித்து உண்மைப் பொருளைத் தீர உண்ர்ந்தவர் மறு பிறவிபற்றி நினைக்க வேண்டியதில்லை.§

358. §

மறுபிறவி எனும் அறிவின்மை அறவே அற்றுப்போக பரிபூரணம் எனும் நிறைவை உய்த்தறிதலே மெய்யுணர்வாகும்§

359. §

எப்பொருளுக்குஞ் சார்பான மெய்ப் பொருளை உணர்ந்து தன்னைச் சார்ந்த ஆசைகள் அற ஒழுகினால் பற்றினால் வருந் துன்பங்கள்
வரா.
§

360. §

ஆசை வெறுப்பு திரிபுணர்ச்சி என்ற மூன்றின் பெயரே அழிந்து போக ஒழுகினால் பெருந் துன்பங்களே முடிவுக்கு வந்து விடும்.§