Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கொல்லாமை

321. §

ஏனைய தீச் செயல் யாவற்றுக்கும் கொலையே வழி வகுப்பதால் பிற உயிர்களைக் கொல்லாமையே அறச் செயலாகும்.§

322. §

இருக்கும் உணவை மற்றையோருடன் பகிர்ந்து உண்டு உயிர்களைக் காப்பாற்றுதல் அறநூல்கள் தொகுத்துச் சொன்ன அறச்செயல்கள் யாவற்றுள்ளும் தலையானது.§

323. §

கொல்லாமை அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையானது. பொய்யாமை எனும் தர்மம் அதனை அடுத்ததாக அமையும்.§

324. §

நல்வழி எனப்படுவது யாதெனில் பிற உயிர்களைக் கொல்லுதலைத் தவிர்க்கும் வழி உணர்த்துகின்ற வாழ்க்கை நெறியே ஆகும்.§

325. §

மறுபிறவிக்குப் பயந்து உலக வாழ்வைத் துறத்தலினும் அதிசிறந்தது கொலைப் பழிக்குப் பயந்து கொல்லா விரதம் மேற்கொள்ளல் ஆகும்.§

326. §

உயிர்களைக் கவரும் மரணம் கொல்லா விரதம் மேற்கொண்டோரின் வாழ்நாளைத் தீண்டாது.§

327. §

தன் உயிரைக் காப்பதற்கான நிலை ஏற்படினும் பிற உயிர்களைக் கவரும் செயல்களைச் செய்யற்க.§

328. §

கொலை செய்வதனால் சிலர் பெரும் செல்வமும் நன்மையும் பெறுகின்றனர், எனினும் மதிநுட்பமுள்ளோர் அத்தகைய நன்மையை வெறுத்து ஒதுக்குவர்.§

329. §

கொலைத் தொழிலைச் செய்யும் கீழ் மக்கள் அவர் கீழ்மையை உணர்ந்தார் மனதில் அவர் புலையர் எனக் கருதப்படுவர்.§

330. §

நோய்வாய்ப்பட்ட உடலுடன் சீர் கெட்டு வறுமையுற்றோரை இவர் முற்பிறவியில் ஒருகால் பிறவுயிரைக் கொன்றவர் என்பர்.§