Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

துன்பம் செய்யாதிருத்தல்

311. §

பிறர்க்குத் தீமை விளைக்கும் செயல் தமக்கு இராசபோகம் தரினும் மனத்தூய்மை உடையார் அத்தீச் செயலைச் செய்யார்.§

312. §

வெறுக்கும் வகையில் தாம் துன்புறுத்தப்படினும் மற்றையோரை துன்புறுத்தாமையே மனத்தூய்மை உடையார் கொள்கையாகும்.§

313. §

தாம் பகைக்காத போது பகைவர் தமக்குத் துன்பம் செய்த போதிலும் பதில் அவர்க்குத் துன்பம் செய்யின் இன்னல்கள் ஓயாது தொடர்ந்து வரும்.§

314. §

தமக்குப் பிறர் செய்த துன்பங்களைப் பொறுத்து, அவர்களிடத்தில் அன்பு பாராட்டி இவ்விரண்டினையும் மறந்தால் துன்பம் செய்தார்க்கு உண்டாகும் வெட்கமே அவர்களைத் தண்டித்து விடும்.§

315. §

பிறர்க்கு ஏற்படும் துன்பம் தமக்கே வந்தது போல மதித்து அதனைத் தடுக்கத் தூண்டாத அறிவினால் மனிதனுக்குப் பயன் என்ன?§

316. §

தமக்குத் தீயன என தான் உணர்ந்தவற்றைப் பிறர் பாட்டு ஒருகாலும் செய்ய வேண்டாம்.§

317. §

தெரிந்து கொண்டு எவர்க்கும் எக்காலத்தும் எவ்வகையிலேனும் துன்பம் செய்யாதிருத்தலே மிக உன்னத கொள்கையாகும்.§

318. §

தனது உயிர்க்குத் துன்பம் பயப்பது என உணர்ந்த ஒருவன் ஏனைய உயிர்களுக்கு அத்துன்பத்தைச் செய்ய முனைவது ஏன்?§

319. §

முற்பகல் பிறருக்கு ஒருவன் துன்பம் செய்யின் பிற்பகலிலே அவனுக்குத் துன்பங்கள் தாமாகவே வரும்.§

320. §

பிறருக்குத் துன்பம் செய்தவரையே துன்பம் சுற்றிச் சூழுமாதலால் துன்பம் அனுபவிக்க விரும்பாதவர் பிறருக்குத் துன்பம் செய்தலைத் தவிர்க்க.§