Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மாமிசம் மறுத்தல்

251. §

தன் உடலை வளர்ப்பதற்கு மற்றெரு உயிரின் உடலை உண்பவன் பிற உயிர்களிடம் எப்படிப் பரிவு காட்டுவான்.§

252. §

சிக்கனமில்லாதவன் கையில் பணம் சேராதது போல பிற உயிரின் ஊனை உண்பவன் உள்ளத்திலே பரிவு இராது.§

253. §

ஒரு உயிரின் உடலை விரும்பி உண்பவனும் ஆயுதம் ஏந்தியவனும் ஒரே தன்மையரே. இவ்விருவர் உள்ளத்திலும் பரிவு ஒருபோதும் இராது.§

254. §

"இரக்கம், இரக்கமின்மை என்பவை என்ன?" என்று கேட்டால் கொல்லாமையும் கொல்லுதலும் என்பதே பதில். ஆதலால் புலால் உண்ணல் எவ்விதத்திலும் அறமாகாது.§

255. §

புலால் உண்ணாமல் விடுதலால் உயிர் காப்பாற்றப்படுகிறது. ஊண் உண்ணுபவரை நரகம் உள்ளிழுத்து மூடிக் கொள்ளும்.§

256. §

உலகத்தார் உண்பதற்காக ஊன் வாங்காவிடின் விற்பதற்காக உயிரைக் கொல்வார் எவரும் இரார்.§

257. §

ஊனானது மற்றெரு உயிரைக் கொன்று கிடைப்பது என்று உணர்ந்தவன் அதனை உண்பதைக் கைவிட்டு விடுவான்.§

258. §

மற்றோரை வருத்தும் கொடுமை நீங்கிய உள்ளுணர்வு உடையோர் உயிர் பிரிந்த ஊனை உண்ண மாட்டார்.§

259. §

நெய் சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதை விட ஓர் உயிரைக் கொன்று உண்ணாது இருத்தல் மிக நன்று.§

260. §

ஓர் உயிரைக் கொல்லாதவனும் கொன்றதின் ஊனை உண்ணாதவனுமான ஒருவனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.§