Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அருள் உடைமை

241. §

அருட்செல்வம் மற்றெல்லாச் செல்வத்திலும் சிறந்தது. பொருட்செல்வம் இழிந்தோரிடத்தும் உண்டு.§

242. §

வீடு பெற உதவும் பல வழிகளுள் அருளால் வரும் வழியைக் கண்டு அவ்வழி ஒழுகுக.§

243. §

அருள்நெறி சார்ந்த உள்ளம் உடையவர் அறியாமை இருளும் துக்கமும் சூழ்ந்த வாழ்வில் இழுக்கப்படமாட்டார்.§

244. §

பிறவுயிர்களை எல்லாம் பாதுகாத்து அருள் பாலிப்பவர்க்குத் தன்னுயிர் பொருட்டு அஞ்சக்கூடிய தீச்செயல் இல்லை.§

245. §

அருளுள்ளம் படைத்தவர்களுக்குப் துன்பமே இல்லை. காற்று வீசப்பெறும் செழிப்பான பரந்த நிலத்து மக்கள் இதற்குச் சான்றாவர்.§

246. §

அருளை மறந்து கொடுஞ்செயல் பிரிகின்றவர், அறவழியை மறப்பதனால் வரும் துன்பத்தை மறந்து விட்டனர் போலும்.§

247. §

செல்வம் இல்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை. அது போல இரக்கம் இல்லார்க்கு மேலுலக வாழ்வு இல்லை.§

248. §

பொருள் இல்லாதார் ஒருகாலம் செல்வந்தராதல் கூடும். ஆனால் அருள் அற்றார் மீட்சியின்றி எல்லாமே அற்றார் ஆவர்.§

249. §

அருள் இல்லாதவன் அறச் செயல் செய்வதைச் சிந்திப்பின் அது ஒருவன் உள்ளத் தெளிவின்றி மெய்ப்பொருளை உணர்தலைப் போல் காணும்.§

250. §

தன்னிலும் மெலிந்தோரைத் துன்புறுத்தச் செல்லுமுன், தன்னினும் வலிமை உள்ளவர் முன்னிலையில் தான் நின்றதை எண்ணுக.§