Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தீச்செயல்களை அஞ்சி ஒதுக்குதல்

201. §

ஆணவம் தரும் பாபச் செயல்புரிய அறிவுடைய நல்லோர் அஞ்சுவர், தீயோர் அதற்கும் அஞ்சார்.§

202. §

தீயனவற்றிலிருந்து மேலும் தீயன விளைகின்றனவாதலின் தீய செயல்கள் நெருப்பினும் கொடியது என அஞ்சப்படும்.§

203. §

தம் பகைவர்க்கு கேடு செய்யாது தவிர்த்தல் பரம விவேகமாகும்.§

204. §

தரும நெறியை மறந்தோரே மாற்றானுக்குக் கேடு செய்வர். அங்ஙனம் சதி செய்வோருக்கு அறக்கடவுள் கேடு சூழும்.§

205. §

"நாம் வறியர்" என்று சொல்லித் தீயவழியில் பிறர் பொருள் கவரக் கூடாது. கவர்ந்தால் அச்செயல் அவர்களை மேலும் வறியர் ஆக்கிவிடும்.§

206. §

தமக்கு இடுக்கண் தரும் துன்பத்தினின்று தப்ப விரும்புவோர், பிறருக்குத் துன்பம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.§

207. §

வெறுப்பு நிறைந்த பகைவனிடமிருந்து தப்பினும் தப்பலாம். ஆனால் ஒருவனின் வெறுப்பு நிறைந்த செயல்களே அவனைத் துரத்திச் சென்று அழித்துவிடும்.§

208. §

ஒருவனின் நிழல் அவன் பாதங்களை விடாது தொடருவது போல, பாபச் செயல்கள் அவனை விடாது தொடர்ந்து அழிக்கும்.§

209. §

தன் மீதே ஏதும் பற்றுடையவனாயின், எத்துணைச் சிறியனவாயினும் தீய செயல்களுக்கு அவன் இடமளித்தலாகாது.§

210. §

அறநெறியிலிருந்து வழுவாது, தீயதும் இழைக்காமல் இருந்தால் மக்கள் ஆழிவுக்கு ஆளாகார் என்பது உறுதி,.§