Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பயன் இல்லாத சொல் தவிர்த்தல்

191. §

பலரும் கோபிக்கப் பயனற்ற வார்த்தை பேசுவோன் யாவராலும் இகழப்படுவான்.§

192. §

பலருக்குப் பயனற்றவை சொல்பவன், நண்பருக்குத் தீமை செய்பவனிலும் கெட்டவனாவான்.§

193. §

ஒருவன் நெடுநேரம் பிதற்றிக் கொண்டிருப்பானாயின், அது அவன் ஓர் அறிவிலி என்பதைக் காட்டிவிடும்.§

194. §

பயன்தரா சொற்கள் இருவகைக் கேடுள்ளவை கேட்போர் களிப்புக் கெடும், பேசுவோர் சுய மதிப்பும் மறையும்.§

195. §

தலை சிறந்த மக்களும் பயனில்லாத வீண்வார்த்தைகள் பேசினால் அன்னார் தன்மானமும் நன்மதிப்பும் நீங்கி விடும்.§

196. §

பொருளில்லாத சொற்களை மீண்டும் மீண்டும் பிதற்றிக் களிப்பவனை மனிதனெனக் கொள்ளற்க. மனிதருள் பதர் எனக் கொள்க.§

197. §

அறிவுடையோர் சில தவிர்க்கமுடியாத வேளை கடுஞ் சொல் சொன்னாலும் எக்காலும் வீண்சொல் பேசுவதைத் தவிர்த்தல் நன்று.§

198. §

பெரும் பயன் நாடும் அறிவுடையோர் பயனற்ற அல்லது கருத்தற்ற சொல் என்றுமே பேசார்.§

199. §

மயக்கமும் குற்றமும் இல்லாத் தூய அறிவுடையோர் பெரும்பயன் கருதி வீண்சொற்கள் மறந்துங் கூறார்.§

200. §

சொல்வதெனில் பயனுள்ளவற்றை மட்டுமே கூறுக. பயனில்லாவற்றைப் பேசாது விடுக.§