151. § | பூமி அதனைத் கொத்தித் தோண்டுவதையும் தாங்குவது போல் தம்மை ஏளனம் செய்வோரைப் பொறுத்தல் மிக நன்று. § |
152. § | தமக்குத் தீமை செய்வதைப் பொறுத்துக் கொள்வது என்றுமே நல்லது. அத்தீச்செயலை மறந்து விடுவது அதனிலும் நன்று.§ |
153. § | விருந்தினரை உபசரியாது திருப்பிவிடுதல் வறுமையிலும் வறுமையாகும். பிழை செய்தோர் மடைமையைப் பொறுப்பது வலிமையில் மிக வலிமையாகும்.§ |
154. § | தம் பெருமை என்றுமே மங்காதிருக்க வேண்டுவதை விரும்புவோர் பொறுமையைப் போற்றி ஒழுகுதல் வேண்டும்.§ |
155. § | பிறருக்குத் தீங்கு செய்பவர் மதிப்பற்றவர். ஆனால் தமக்குத் தீங்கு செய்தவரைப் பொறுப்பவர் பொன்போல் மதிக்கத்தக்கவர்.§ |
156. § | பழிவாங்குபவன் இன்பம் ஒருநாள் மட்டுமே நிற்கும். பொறுமையுள்ளோன் புகழ் கால முடிவு வரையும் நிலைக்கும்.§ |
157. § | நியாயமின்றி ஒருவன் தனக்குத் துன்பம் விளைத்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அநீதியாகப் பழிவாங்குதலைத் தவிர்க்க வேண்டும்.§ |
158. § | தற்பெருமையால் தனக்குப் பிழைசெய்தாரையும் ஒருவன் தன் பொறுமையினால் வெற்றி கொள்ள வேண்டும்.§ |
159. § | தற்பெருமையால் பிழை செய்தவரைப் பொறுப்பவர் ஞானிகளின் பால் காணும் அரும் மனத்தூய்மை உடையவர்.§ |
160. § | விரதம் அனுட்டிப்பதனால் வரும் துன்பங்களைத் தாங்குபவர்கள் பெரியோர்களே. ஆயினும் அவர்கள் பிறர் கடுஞ் சொல்லால் வரும் துன்பத்தைப் பொறுப்பவர்களுக்குப் பிற்பட்டவர்களே.§ |