131. § | நல்லொழுக்கம் ஒருவனைப் புகழ் விளங்கும் உயர்நிலைக்கு இட்டுச் செல்லும். ஆதலால் அதை உயிரினும் பெரிதாக மதித்துப் பேணல் வேண்டும்.§ |
132. § | வாழ்க்கையின் இக்கட்டுக்களின் போது வருந்தியும் நல்லொழுக்கம் பேணுக. அதன் பலாபலனை ஆராயும் போது ஒழுக்கமே உற்ற துணை என்று உணர்க.§ |
133. § | நல்லொழுக்கம் உயர் குடியினரின் பிறப்புரிமையாகும். தீயொழுக்கம் தரும் விளைவு இழி பிறப்பாகும்.§ |
134. § | அந்தணன் ஒருவன் வேதம் மறப்பினும் மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் குல ஒழுக்கம் வழுவினால், உயர்க்குலச் சிறப்பு அழிந்துவிடும்.§ |
135. § | அழுக்காறுடையானிடம் செல்வச் செழிப்பு இராது. அவ்வாறே ஒழுக்கம் இல்லானிடம் வாழ்வில் உயர்வு இல்லை.§ |
136. § | மனவுறுதியுடையோர் நல்லொழுக்கத்தினின்று என்றும் தளரார். ஏனெனில் அதிலிருந்து தவறுதலால் ஏற்படும் கெடுதிகளை அவர் அறிவர்.§ |
137. § | ஒழுக்கத்தினால் ஒருவர் கெளரவமான உயர்நிலை எய்துவர், ஆனால் களங்க ஒழுக்கம் பழியன்றிப் பயன் வேறேதும் தராது.§ |
138. § | நல்லொழுக்கம் அறமென்னும் வயலின் விதையாகும் தீயொழுக்கத்தின் விளைவு என்றும் தீராத துயரமாகும்.§ |
139. § | தீய சொற்களை மறந்தும் வாயாற் பேசுதல் அறவழி ஒழுகுவோருக்கு இயலாத செயலாகும்.§ |
140. § | உலகத்தோடு இணக்கமாக வாழத் தெரியாதார் பற்பல கற்றுள்ளாரேனும் அறியாமையின் பாற்பட்டவரேயாவர்.§ |