Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

நடுவு நிலைமை

111. §

பகைவர், அயலார், நண்பர் ஆகியோர் எவர் பக்கமும் சாராமல் செயற்படும் நடுவு நிலைமை நன்றெனப்படும்.§

112. §

நீதிமான் செல்வம் அழிவதே இல்லை. மேலும் அது அவன் வழித்தோன்றல்களைப் பாதுகாக்கும் நிதியாகவும் இருக்கும்.§

113. §

எத்துணை நன்மை பயக்க இருப்பினும் நேர்மை தவறிப் பெறும் செல்வத்தை அன்றே கைவிட்டிடுக.§

114. §

நடுவு நின்று தக்கார் யார், தகாதார் யார் என்பது அவரவர் பிள்ளைகளால் ஐயமின்றி அறியப்படும்.§

115. §

கேடும் செல்வமும் உலகில் என்றுமே அழிந்து விடுவதே இல்லை. இவ்விரு நிலைகளிலும் நேர்மை வழுவாமையே நடுநிற்கும் பெரியார்
அணிகலனாகும்.
§

116. §

உள்ளம் ஓரம் சார்ந்து செயல்களும் சீர்கெடுமாயின் "யான் அழிவது உறுதி" என எவரும் உணர்ந்து கொள்வாராக.§

117. §

ஒருவன் வறுமையில் ஆழ்ந்திருந்தாலும் நடுநிலை வழுவாது இருப்பின் அவனை வறியவன் என்று உலகம் கணிக்காது.§

118. §

துலாக்கோல் போல் எப்பக்கமும் ஓரம் சாராது சம நிலையில் நிற்றல் அறிவுடையோர்க்கு ஆபரணமாகும்.§

119. §

நடுவு நிலைமை மனத்தில் கோணாதிருப்பின் ஓரம் சாராமல் செல்லும் ஆற்றலும் திறம்பட அமையும்.§

120. §

பிறர் நலத்தைவும் தம் நலம் போல் பேணும் வணிகர் தொழில் மேலும் செழித்தோங்கும்.§