Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

விருந்து ஓம்பல்

81. §

வீடமைந்து இல்வாழ்வு வாழ்தலும் பொருளீட்டலும் விருந்தினரை உபசரித்துப் பணிபுரிவதற்கேயாம்.§

82. §

விருந்தினர் வீட்டில் இருக்கவும் தன் உணவை மறைத்து உண்ணல் அது சாவா அமிர்தமாயினும் விரும்பத்தக்க முறை ஆகாது.§

83. §

தினமும் வருவிருந் தோம்புவான் வாழ்க்கை எக்காலத்தும் வறுமையால் துன்புற்று வருந்தாது.§

84. §

புன்முறுவலுடன் விருந்தினரை உபசரிப்பான் இல்லத்தில் திருமகள் மனமுவந்து என்றும் வாசம் செய்வாள்.§

85. §

விருந்தினரை உபசரித்துப் பின் எஞ்சியதைத் திருப்தியுடன் உண்பவனுடைய வயல் விதைக்காமலே பெருவிளைவு தரும்.§

86. §

செல்லும் விருந்தினரை வழியனுப்பி இன்னும் வரும் விருந்தினரை வரவேற்கக் காத்திருப்பவன் மறுமையில் விண்ணுலகத்தாரின் நல்விருந்தினனாவான்.§

87. §

விருந்தினருக்கு அளிக்கப்படும் கொடையின் பெறுமதி அதைப் பெறும் விருந்தாளியின் தகுதி கொண்டே கணிக்கப்படும்.§

88. §

விருந்தினருக்குத் தியாகம் என்றுமே செய்யாதோர் "செல்வத்தை மறைத்தோமே, ஏனையோருடன் நட்பிழந்திருந்தோமே, இப்போது எம்மைப் பேணுவாரில்லையே" எனப் பின் வருந்துவர்.§

89. §

பெரும் செல்வமிருந்து விருந்தோம்பல் தவிர்ப்பதே ஏழ்மையுள் ஏழ்மை, அறிவில்லா மூடர்களே அவ்வாறு செய்வர்.§

90. §

அனிச்சம் பூவோ முகந்தாலே வாடும், வரும் விருந்தினரின் மனமோ வெறுப்புடன் நோக்கவே வாடும்.§