Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அன்புடைமை

71. §

அன்புப் பெருக்கைத் தடுக்கவல்ல அடைப்பு ஏதும் உண்டா? அன்புள்ளத்தில் பனிக்கும் கண்ணீர்த் துளிகள் அதனைக் காட்டிவிடும்.§

72. §

அன்பிலார் தமக்கே உரித்தாவர். அன்புடையோர் தம் எலும்பையும் பிறர்க்கு உரித்தாக்குவர்.§

73. §

அன்பு கலந்த வாழ்வின் பயனை உணர்த்தவே உயிர் உடம்போடிணைந்து வாழ்கின்றது என்பர்.§

74. §

அன்பு எல்லா உயிர்களிடத்தும் நேசத்தை அளிக்கும் அந்நேசம் நட்பு எனும் விலைமதிப்பற்ற செல்வம் தரும்.§

75. §

நற்குடும்பத்தினர்க்கு இம்மை இன்பத்தையும் மறுமை பேரின்பத்தையும் வழங்குவது அன்பே. அன்பின் மேம்பாடு இதுவே என்பர்.§

76. §

அறத்தொடு வாழும் உயிர்களிடத்தே அன்பு நிலைக்கின்றது என உண்மை உணராதோர் கூறுவர். மறச்செயலில் ஆழ்ந்துள்ளோர்க்கும் அன்பே துணை.§

77. §

கொளுத்தும் வெயில் எலும்பில்லா உயிர்களை வாட்டுவது போல அறம் அன்பிலாதவரை வருத்தும்.§

78. §

காய்ந்த மரம் பாலைநிலத்தில் தளிர்க்காதது போல உள்ளத்து அன்பிலார் வாழ்க்கை செழிக்காது.§

79. §

உள்ளத்தில் அன்பின்றிக் களங்கமுற்றிருப்பவர்க்குப் புற உறுப்புக்கள் சிறந்திருப்பினும் பயயென்ன?§

80. §

உள்ளத்தில் அன்பு கொண்டவனே உண்மையில் உயிர் வாழ்பவனாவான். அன்பிலார்க்கு உடம்பு எலும்பை மூடிய வெறும் தோற்பையாம்.§