11. § | மழையினால் உலகம் அழிவின்றி வாழும். அவ்வாழ்வைத் தரும் மழையை வாழ வின் அமிர்தம் எனக் கருதுக.§ |
12. § | உண்பாருக்கு நல்லுணவை உண்டாக்கித் தானுமே உணவுகளில் ஒன்றுமாகின்றது மழை.§ |
13. § | உலகினைப் பெருங் கடல் நீர் சூழினும், திரண்ட மேகங்கள் பொய்ப்பின் பசிப்பிணி எனும் வெள்ளத்தே உலகமே மூழ்கிவிடும்.§ |
14. § | மழை வளங் கொழியா தாயின், உழவரும் கலப்பை கொண்டுழார்.§ |
15. § | அழிப்பதுவும் மழை, அழித்தவற்றை மீண்டும் கொழிக்கச் செய்வதும் மழை.§ |
16. § | விண்ணிலிருந்து மழைத்துளி வீழாதாயின் பூமியில் பசும்புல்லும் தலை காட்டாது.§ |
17. § | முகில்கள் கடல் நீரை முகந்து மீள மழையாய் வழங்காவிடின் விரிகடலும் தன்னியல்பில் குறைவுபடும்.§ |
18. § | வானம் மழையின்றி வரண்டால் பூமியில் தேவர்க்குத் திருவிழாவும் தினவழிபாடும் சுருங்கிவிடும்.§ |
19. § | விண் தன் கொடையை வழங்காதாயின் வள்ளல் தம் கொடைவளனும் தவசியர் தம் துறவறமும் இப்பேருலகுக்கு அருள்புரியா.§ |
20. § | நீரின்றி உலகில் ஓருயிரும் வாழாது இடையறா அந்நீரோட்டம் மழையின்றி நிலைபெறாது.§ |