குருமார்களின் சரித்திரங்கள்

Page 5: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/05_fm_05.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

§

சமர்ப்பணம் §

னித இனம், ஆண்கள் மற்றும் பெண்களை ஊக்குவித்து வழிநடத்துவதற்காக பிறவி எடுத்த உன்னதமான, தைரியமான மற்றும் உயர்ந்த ஆன்மாக்கள் பற்றிய கதைகள், இந்து வரலாற்றில் நிறைந்து இருக்கின்றன. மனித நேயத்தின் தேவைகள் மிகவும் தீவிரமாக இருக்கும் போது, அவற்றை எதிர்கொள்ள மிகவும் உயர்ந்த ஆன்மாக்கள் “சொர்க்கத்தில் இருந்து பூமியில்” அவதரிக்கிறார்கள். குருதேவா என்று அதிக பாசத்துடன் அழைக்கப்பட்ட சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, அத்தகைய ஒரு ஆன்மாவாக விளங்கினார். அவர் நவீன யுகத்தின் நவீன சவால்களை எதிர்கொள்ள பிறவி எடுத்தார், மேலும் “சைவ தர்மத்தை பாதுகாக்க, காப்பாற்ற மற்றும் மேம்படுத்த," மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் பற்றிய புரிதல், வழிபாடு மற்றும் உணர்தலை தூண்டி விடுவதற்காக தான் பிறவி எடுத்ததாக அவர் கூறுவார். அவர் அதை எவ்வாறு செய்து காட்டினார், என்பதை நீங்கள் படித்து தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். ஆனால் அந்த கதை தன்னை பற்றியது இல்லை என்று எச்சரிப்பதில் அவர் முதலாவதாக நிற்பார். வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து, ஆத்ம ஞானம் பற்றிய தகவலை காப்பாற்றி வந்துள்ள ஒரு பரம்பரையில், அவர் ஒரு சமீபகால குருவாக இருந்துள்ளார். ஆனால் அந்த பரம்பரை அவருக்கு முன்பாக இருந்துள்ளது, அவரது வாழ்நாளில் செழித்து, தற்போதும் செயல்பாட்டில் இருக்கிறது. ¶குருதேவாவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள், இந்த புத்தகத்தில் வரும் கடந்தகால நிகழ்வுகளில் வாழ்ந்து, அந்தர்லோகங்களுடன் அவரது இணக்கத்தை கவனித்து இருக்கிறார்கள். மேலும் வெளிப்பாடு மற்றும் உணர்தல் நிறைந்த அவரது வாழ்க்கையை அனுபவித்தும் இருக்கிறார்கள். அவர் நல்ல உயரமாக, ஆற்றல்மிக்கவராக, இரக்க குணம் நிறைந்தவராக, செயல்களில் தீவிரமாக சிவபெருமானை போலவே காட்சி அளித்தார். ஒரு புதிய மொழியை உருவாக்குதல், ஒளி-உடலுடன் இருந்த தேவர்களுடன் உரையாடுதல், அமெரிக்காவில் முதல் தென்னிந்திய மடத்தை ஸ்தாபித்தல், இந்து சமயத்தின் முதல் சர்வதேச பத்திரிகையை தொடங்குதல், எதிர்காலத்தை கண்டறிந்த பிறகு அதை புதிதாக உருவாக்குதல் என்று மக்கள் செய்யாத பல அரிய செயல்களை, அவர் செய்துக்காட்டினார். நந்திநாத கைலாச பரம்பரையை நிலைநிறுத்தும் பணிக்காக, யோக சுவாமி முனிவர் இவரை தேர்ந்தெடுத்ததில் எந்த அதிசயமும் இல்லை. இவரை மேற்கத்திய நாடுகளின் முதல் அதிகாரப்பூர்வமான சற்குருவாக கிழக்கத்திய நாடுகள் ஏற்றுக்கொண்டதில் எந்த அதிசயமும் இல்லை. அவரது செயல்கள் அனைத்தும் ஒரு தேவையை பூர்த்தி செய்ய, விழிப்புணர்வை மேம்படுத்த மற்றும் எதிர்காலத்திற்கு இந்து தர்மத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருந்தன. அந்த நோக்கம் சமீபத்திய எதிர்காலத்திற்காக அல்லாமல், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த எதிர்காலமாக இருந்தது, மற்றும் இதை அவர் விருப்பத்துடன் “எதிர்காலங்களின் எதிர்காலம்” என்று அழைத்தார். ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து இருக்கும் உறுதியுடன் அவரது கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அவரது மடாலயம் மற்றும் யோக சமூகம், ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து நிலைத்து இருக்கும் உறுதியுடன் வடிவமைக்கப்பட்டன. அவரது பத்திரிகை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமல்லாது, பல நாடுகளை முழுமையாக தொடர்ந்து ஊக்குவித்து உருமாற்றி வருகிறது. ஆனால் அவர் முழுமையான முதற்பொருள் மீது பெற்ற உணர்தல், இவை அனைத்தையும் கடந்து முதன்மையானதாக விளங்குகிறது. இருந்தாலும் கர்மவினையை பற்றி, ஒரு குழந்தைக்கும் எளிய முறையில் பாடம் கற்பிக்கும் திறனுடன் இருந்தார். ¶அவரது இறுதி மகாபயணத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி, ஒரு மேற்கத்திய உடலில் ஒரு கிழக்கத்திய ஆன்மாவாக, நவீன யுகம் வழங்கிய அனைத்தையும் விரும்பி, அவற்றை பழங்காலம் சார்ந்த அனைத்தையும் பாதுகாக்க பயன்படுத்திய குருதேவாவிற்கு, இந்த புத்தகத்தை சமர்பிக்கிறோம். அவரையும் அவரது குருக்களையும் பற்றிய முழுமையாக அறிவது எங்களது புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்ற மன உறுதியுடன், அவரது திருவடிகளில் பணிவுடன் விழுந்து வணங்குகிறோம். அவரது மற்றும் அவரது குரு மற்றும் அவரது குருவின் குரு பற்றிய கதையை மகிழ்ச்சியாக படித்துக்கொண்டே வரலாற்றில் பின்னோக்கி செல்லுங்கள், மற்றும் என்றாவது ஒரு நாள் அவரைப்போன்ற ஒருவரை சந்திப்போம் என்ற மனஉறுதியுடன் இருங்கள். வாழ்க! சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி! வாழ்க!§§