10 Questions About Hinduism

imageஜாதியைப் பற்றியும் தீண்டாமையைப் பற்றியும் கூறப்படுவதென்ன?

ஜாதி என்பது இந்திய சமூகத்தில் செய்யும் தொழிலைப் பொறுத்துப் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் ஒரு பிரிவாகும். கீழ்ச் சாதி அல்லது தாழ்ந்த பிரிவினர் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் ஒதுக்கப்பட்டு பாகுபாடு காட்டி, தவறாக நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் ஜாதியைப் பொறுத்து பாகுபாடு காணல், தூற்றுதல் மற்றும் அவமதித்தல் சட்டப்படி குற்றமாகும்.

ஜாதி என்பது பரம்பரையாக இருந்து வருவது. இந்திய சமூகத்தில் இரு பிரிவுகள் உண்டு. முதலாவது பிரிவு வர்ணம். இது சமூகத்தில் உள்ள நான்கு பிரிவுகளாகும். அவை தொழிலாளர்கள், (சூத்திரர்கள்) வணிகர்கள் (வைசியர்கள்) சட்டம் உண்டாக்குபவர்கள்/ஆட்சியாளர்கள் (க்ஷத்திரியர்கள்) மற்றும் குருக்கள்/கோயில் பூசகர் (பிராமணர்கள்). இரண்டாவது பிரிவு ஜாதி. ஆயிரக்கணக்கான தொழில்களை அடிப்படையாகக் கொண்ட பிரிவு அல்லது கழகங்கள். கழகத்திலுள்ளோர் ஒரே தொழில் புரிகின்றனர். இந்த ஜாதியினர் பெரும்பாலும் திருமணத்தை தங்கள் ஜாதிக்குள்ளேயே நடத்திக் கொள்கின்றனர். மேலும் தங்கள் ஜாதிக்குரிய பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். நகரங்களில் வெவ்வேறான தொழில்களில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் வழக்கமாக அவர்கள் தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் நடத்திக் கொள்கின்றனர்.

செல்வம் குறிப்பாக நகர்ப் பகுதிகளில் ஜாதியை வெல்கிறது. தொழில்மயமும் கல்வியும் ஜாதிப் பிரச்சனையை பெரும்பாலும் நீக்கியது அல்லது தங்களது பரம்பரைத் தொழிலை மாற்றி புதிய தொழிலுக்கு வழிவகுத்தது. இன்று ஜாதி முறை படிப்படியாக வளர்ச்சியடைந்து முன்பு இருந்த கழக முறை நீங்கி குடும்ப உறவு சார்ந்த ஒரு குலமாக மாறியது. கீழ்நிலையில் உள்ளவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படுகின்றனர். இவர்கள் இழிந்த தொழில் புரிந்து அமெரிக்க கறுப்பு இன மக்களைப்போல் துன்பத்தை அனுபவித்தனர். அமெரிக்க கறுப்பர்கள் 138 வருடங்களுக்கு முன்னர்தான் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தியாவில் ஜாதி பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நவீன இந்துக்கள் ஜாதி முறையைக் கண்டித்து சரிபடுத்த முயற்சிக்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா (அடிமைத்தனம்) போன்று இது கடினமான ஒன்று. இதை முடிவுக்குக் கொண்டுவர குறிப்பாக கிராமங்களில் பல்லாண்டுகள் ஆகலாம்.

விரிவான விளக்கம்: ஜாதியால் சந்தேகத்துக்கு இடமின்றி இந்துக்கள் ஒரு பெரிய பிரம்பால் அடிபட்டது போன்று உள்ளனர். மேலை நாட்டு பள்ளிகளில் இதை வரையறுக்கப்பட்ட ஒன்று அல்லது இந்து சமயத்தில் குறைபாடு உடைய ஒன்று என்று கற்பிக்கின்றனர். தீண்டாமை மேலை நாட்டருக்கு அதிர்ச்சியாயிருக்கிறது. ஜாதி இன பாகுபாடின்றி சமூகத்தைப் பலபிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது பிரச்சனை: சமூகப் பிரிவுகள். இந்திய மக்கள் உலகின் மிகப்பழமை வாய்ந்த சமூகங்களில் ஒன்றாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா கலாச்சாரத்தையும் சமயத்தையும் நிலைநிறுத்தி வந்திருக்கிறது. மறுபக்கம் ஐரோப்பா ஆயிரக்கணக்கான புரட்சிகளைக் கண்டுள்ளது. ஆனாலும் 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கு முன்னரே, இந்தியாவின் ஜாதி முறையைப் போன்ற வழக்கத்தைக் காணலாம். ஐரோப்பிய சமூகம் உயர்ந்தோர் (பரம்பரையாகஉரிமை கொண்டாடுதலை இன்றுவரை பின்பற்றப்படுகிறது) வர்த்தகர், கைவினைஞர், விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கியது. கைவினைஞர்கள் தங்கள் தொழில் ரீதியான அமைப்பை ஏற்படுத்தி நெருக்கமாக இருக்கவும் சந்தை வாய்ப்பினை ஏகபோக உரிமைக்காகவும் செயல்படுகின்றனர். தொழில் ரீதியான கழகப் பெயர் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உலோகத் தொழில் செய்பவரை ("ஸ்மித்") என்று கூறுவது போன்றது. பொது கல்வி முறை கிடையாது. ஒவ்வொரு இனத்தாரும் தங்கள் வீடுகளிலேயே குடும்பத் தொழிலைக் கற்றுக் கொள்வர். சிறிய அளவிலான தொழில் நுட்ப மாற்றத்தால் வேலை நிலையானதாகவே இருந்தது. மேலை நாடுகளில் தொழில்மயமும் பொது கல்வி முறையும் (ஆனால் பழையதை அழிக்கவில்லை) இன்று இந்தியாவில் ஜாதியையும் இனவாத்தையும் மாற்றியது போன்று வகுப்புமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது.

image

நான்கு இனம் அல்லது வர்ணம் இனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் கணேசப் பெருமானைச்சுற்றி இருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தொழிலாளி, வணிகர், படைத் தளபதி மற்றும் குருக்கள்/பூசகர். இவை எல்லா நாடுகளிலும் சமூகங்களிலும் காணப்படும் இயல்பான பிரிவுகளாகும். சர்வதேச ரீதியில் ஏதோ ஒருவகையில் இப்பிரிவு தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், பாதுகாப்புப்படையும் காவல் துறையும் மற்றும் சமய மேலாண்மைக்குழுவினர் ஆகியோராக இருக்கின்றனர்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

இரண்டாவது பிரச்சனை: இன/வகுப்பு பாகுபாடு-இன்று மேலை நாடுகளிலும் பாகுபாடு காட்டப்படுகிறது என்பதை பெரும்பாலான இந்தியர்கள் அறியாமலிருக்கின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற மக்கள் வீடின்றி நகரத்தெருக்களில் உண்மையான தீண்டாதவர்களாக வாழ்கின்றனர். 1950இல் அமெரிக்க நகரங்களில் இனபாகுபாடு, பொதுவியல் உரிமை அமைப்பு ஏற்ப்டுவதற்கு முன் இருந்ததைவிட மோசமாக இப்பொழுது உள்ளது.

நகரங்களிலிருந்து புறநகர்ப்பகுதிக்கு வெள்ளையர்கள் ஓடியது ஒரு முக்கியமான காரணம். ஒரே குற்றத்திற்கு அமெரிக்கக் கறுப்பர்களுக்கு கடுமையான தண்டனையும் அமெரிக்க வெள்ளையர்களுக்குக் குறைந்த தண்டனையும் கொடுக்கப்பட்டது. அமெரிக்க இந்தியர் எனச் சொல்லப்படும் அமெரிக்க பூர்வ குடியினர் சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஆதரவற்ற நிலையில், மது பித்தார்களாக அமெரிக்க இந்தியர்களுக்காக கொடுக்கப்பட்ட காலி நிலத்தில் வாழ்கின்றனர். "நீயும் இதைப் போலத் தானே" என்ற பதில். இந்துக்கள் ஜாதி பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரக் கடுமையாக உழைக்க வேண்டியதில்லை என்று பொருள்படாது. ஆனால் உலகத்தில் எந்த நாடும் இன பாகுபாட்டிலிருந்து விடுபடவில்லை என்பதை மற்ற நாடுகளுக்கு நினைவூட்டுகிறது