10 Questions About Hinduism

imageகர்மவினை என்றால் என்ன?

கர்மவினை என்பது காரண காரிய உலகாய முக்கியமான நெறிமுறைகளாகும். நமது நல்ல அல்லது தீய நடவடிக்கைகளின் பிரதிபலன் எதிர்கலத்தில் நம்மை வந்து சேரும். இது நாம் வாழ்க்கையின் பாடங்களைக் கற்று நல்ல மனிதனாக உதவும்.

பூமிக்கு ஈர்ப்பு சக்தியைக் கடவுள் படைத்து ஓர் ஒழுங்கைக் கொண்டு இயல்பாய் இயங்கச் செய்தது போன்று கர்மவினை என்பது நமது மனத்தின் இயல்பான சட்டங்களில் ஒன்றாகும். கர்ம வினையைத் தெய்வீக ஒழுங்காக நீதியைப் படைத்து அதைத் தானாக நீதி நேர்மையுடன் இயங்கச் செய்துள்ளார். பொருத்தமான எதிர்கால நிகழ்கால நடவடிக்கைகளுக்கு ஏற்ற அனுபவங்களை அது தானாகவே உருவாக்கும். கர்மவினை என்பது நடவடிக்கை அல்லது காரண காரியம். நமக்கு துரதிர்ஷ்டமான செயல் அல்லது நியாயமற்ற செயல் நேரிட்டால் அது கடவுள் நம்மைத் தண்டிக்கிறார் என்று பொருளகாது. அது நமது கடந்த கால செயலின் விளைவேயாகும். இந்து சமய வேதம், நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்வோம், தீயதை விதைத்தால் தீயதை அறுவடை செய்வோம் என்று கூறுகிறது. வினை விதைத்தவன் வினையை அறுப்பான், தினை விதைத்தவன் தினையை அறுப்பான். அவ்வாறு தான் நாம் நமது ஊழ்வினையை நமது எண்ணங்களாலும் செயல்களாலும் தீர்மானிக்கிறோம். தெய்வீகச் சட்டம் யாதெனில் நமது வாழ்க்கையில் எவ்விதமான கர்மவினையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அவ்வேளைக்கு அதுதான் நமக்குத் தேவையானதாகும். அதை எதிர் கொள்ள நமக்கு வலிமை நிச்சயமாக இருக்கும். மிகக் கொடிய கர்ம வினையாக இருந்தாலும் அதை அறிவுப் பூர்வமாக எதிர் நோக்கினால் ஆன்மீக வளர்ச்சிக்கான மிகச் சிறந்த ஓர் ஆசானாகத் திகழலாம். கர்ம வினை செயல்படும் விதத்தை புரிந்து கொண்டால், நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடவடிக்கைகள் மூலம் ஒழுக்கமுள்ள வாழ்கையை வாழலாம். இது தர்மம் என்று அழைக்கப்படும்.

விரிவான விளக்கம்: கர்மவினை என்பது அடிப்படையில் ஆற்றலாகும். நான், எண்ணம், பேச்சு, செயல் மூலம் ஆற்றலை வீசுகிறேன். அது காலத்தால் மற்றவர்கள் மூலம் என்னிடமே திரும்ப வருகிறது. நமது செயல்களால் ஏற்படும் விளைவுகளை எப்போதும் எதிர் நோக்கி நமது நடத்தையை மேம்படுத்தித் தூய்மை படுத்திக் கொள்ளாவிடில் துன்பமடைய நேரிடும். ஆதலால் நமது கர்ம வினை ஓர் நல்லாசிரியனாகும். இந்துக்களாகிய நாம் காலத்தை வட்டமான ஒன்றாக எண்ணுகிறோம். அவ்வாறே பொருட்கள் மறுபடியும் அதைச் சுற்றி வருவதாக எண்ணுகிறோம். பேராசிரியர் ஐன்ஸ்டினும் இதே முடிவுக்குத்தான் வந்தார். அவர் காலத்தையும் விண்ணையும் வளைவாகவும், இறுதியில் இது ஒரு சுழற்சியை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வருகிறார். கர்மவினை என்பது ஈர்ப்பு சக்தி போன்று அனைவரையும் வேறுபாடின்றி ஒரே மாதிரி நடத்துகிறது. இந்துக்கள் கர்மவினையை அறிந்திருப்பதால் துன்பம் கொடுத்தவர்களை வெறுப்பதோ கோபம் கொள்வதோ கிடையாது. கடந்த காலத்தில் நாம் புரிந்த செயல்களின் பலாபலனை இப்போது அவர்கள் தருகிறார்கள் என்று இந்துக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கும் அவனுக்கு ஏற்பட்ட பலாபலன்களுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டுமென்று கர்மவினை விதி கூறுகிறது.

image

உங்களின் பெருந்தன்மை வட்டியோடு உங்களிடமே திரும்பி வந்து சேரும். இது கர்மவினையின் நல்லதோர் எடுத்துக் காட்டாகும். மேலுள்ள படத்தில் ஓர் அம்மையார் ஓர் இளைஞனுக்கு ஆடைகள் வழங்குகிறார். கிழே அதே அம்மையார் அண்டை வீட்டாரிடமிருந்து எதிர்பாராத பரிசினைப் பெறுகிறார். அவர் செய்த கர்மவினை அதாவது நல்வினையால் இயல்பாகவே அவருக்குப் பரிசு கிடைத்தது. முன்னெச்சரிக்கையாக புத்திசாலித்தனமாக கர்மவினைப் பாதை மூலம் சென்றால் தர்மத்தின் வழியில் காலடி வைப்போம்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

கர்மவினை என்பதைப்பற்றி தொலைக்காட்சியில் அடிக்கடி கேள்விப் படுகிறோம். "இது என் கர்மவினை" அல்லது "நான் முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாய் இப்பொழுது நல்ல வினைகளை அனுபவிக்கின்றேன்" என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். கர்மவினை சாதாரணமாக "நாம் செய்வது நமக்கே திரும்பும்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்திலுள்ள சில பிரிவுகள் கர்மவினையைத் தீயதாக நினைக்கிறார்கள். ஒரு வேளை தீய கர்மவினையை எதிர் கொள்ளும்போது கர்மவினைப் பயனையைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறோம், நல்ல வாழ்க்கையை அனுபவிக்கும்போது கர்மவினையைப்பற்றி அதிகம் (பொருட்படுத்தாமல்) அறிந்திராமல் இருக்கலாம். சில இந்துக்கள் பாவத்தையும் கர்மவினையையும் சமமாக எண்ணுகிறார்கள். சில கிறிஸ்துவ போதகர்களும் இவ்வாறே போதிக்கிறார்கள். பலர் கர்மவினை என்றால் நமது ஆதிக்கத்திற்குட்படாத முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்ட "விதி" என்று நம்புகிறார்கள். இக்கூற்று தவறாகும்.

எல்லா நிலையிலும், உடலால், எண்ணத்தால் ஆன்மீக ரீதியில் ஏற்படும் ஒவ்வொரு செயலும் அதன் எதிர்ச் செயலுமே கர்ம வினை. இதோ ஓர் எடுத்துக்காட்டு: நான் உங்களிடம் அன்பாகப் பேசுகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாகவும் சமாதானமாகவும் இருக்கிறீர்கள். நான் முரட்டுத்தனமாகப் பேசினால் மனம் வருந்தித் தடுமாறிய நிலையில் இருப்பீர்கள். அன்பும் கொடிதும் பிற்காலத்தில் மற்றவர்கள் மூலம் எனக்குத் திரும்ப வரும். இதுதான் கர்மவினை. கட்டடக் கலைஞர் ஒருவர் புதிய கட்டடத்துக்கான வரைபடம் வரையும் பொழுது படைப்பும் அதனால் விளையக் கூடிய பலன்களும் பற்றிய எண்ணத்தோடு சிந்தித்துச் செயல்படுகிறான். ஆனால் அவன் அழிவு பற்றியும் பலன் தராததைப் பற்றியும் சிந்தித்தால் எந்தவொரு வேலையையும் அவன் விரும்பி செய்தால் கூட அவனால் முடிக்க முடியாது. இது மனத்தின் இயல்பான விதி. இதுவே கர்ம வினையாகும். நமது எண்ணங்களைப்பற்றி அதிகக் கவனமுடனிருக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்கள் படைக்கும். எண்ணங்கள் நல்ல, தீய மற்றும் இரண்டும் கலந்த கர்மவினைகளை உண்டாக்கும்.