68§ |
பிற மத நம்பிக்கையை நாம் எவ்வாறு நோக்குகிறோம்?§ |
ஆழ்ந்த பக்தி கொண்ட இந்துக்கள் தமது சாதனாக்களில் உறுதியாக நின்று தம் சமய நம்பிக்கையை மிக உயரிய பீடத்தில் வைக்கின்றனர். குருதேவர் நம் சமயத்தை உலகிலேயே மிகச் சிறந்த சமயம் என்று மிகத் துணிவாகக் கூறியிருக்கிறார். அதன் சீரிய கலாச்சாரமும் ஆழமிக்க தத்துவமும், பெருங்கோபுரக் கோயில்களும் யோகப் பயிற்சிகளும் இன்னும் நூறு பிறவிகள் எடுத்தாலும் நம்மால் ஆராய்ந்து அனுபவித்து முடிக்க முடியாது. இந்து சமயத்தில் இதுதான் “ஒரே வழி” என்ற கொள்கை கிடையாது. இருப்பினும் இந்த அனாதி நெறிமுறை எல்லா சமயங்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். எல்லா சமயங்களையும் நாம் மிகுந்த சகிப்புத்தன்மையோடும் அன்போடும் பார்க்கிறோம். அதே நேரத்தில் எல்லா சமயமும் ஒன்றல்ல என்றும் நமக்குத் தெரியும். ஒவ்வொரு சமயத்துக்கும் தனித்துவமான நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், ஞானநூல்களும் இருக்கின்றன. அதேவேளை ஒவ்வொரு சமயக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. என்றாலும் சமயங்களுக்கிடையே இந்த வித்தியாசங்கள் பதட்டம் உருவாவதற்கும், சகிக்கமுடியாத சூழ்நிலைக்கும் ஒருக்காலும் காரணமாகக் கூடாது.§
சைவர்கள் வேறொரு சமய நம்பிக்கைக்கு அல்லது இயக்கங்களின் வழிபாட்டு முறைகளுக்கு தடம் மாறிப்போகாமல், தமது சமய நம்பிக்கையில் உண்மையாகவும் உறுதியாகவும் நிற்கின்றனர். நமது சமய நம்பிக்கையை நாம் காக்கின்றோம். பிற சமய வழிமுறைகளின் கவர்ச்சியை நாம் தவிர்க்கிறோம். நமது சமயவழியில் நாம் திருப்தியடைந்து மற்றவர்களை. அவர்களின் சொந்த வழியைப் பின்பற்றவும் அதைக் காக்கவும் ஊக்குவிக்கிறோம். ஒரு சமயத்தின் மீதும், நம்பிக்கையின் மீதும், போதனையின்மீதும் அதன் கலாச்சார வரத்தின் மீதும் மாறுபடாத மனம் வைத்து விசுவாசம் காட்டும்போது அதற்கு மிகுந்த வலிமை உண்டு.§
பிற மதத்தினரை நாம் நமது சமயத்துக்கு மதம் மாற்றுவதில்லை என்றாலும் உண்மையுடன் ஞான தாகத்துடன் வருவோரை நாம் ஆதரித்து ஏற்றுக் கொள்கிறோம். ஆபத்துக் காலத்தில் அல்லது பலவீனமாக இருக்கும் காலத்தில் இந்துக்களை இந்து சமயத்திலிருந்து பிற மதத்துக்கு குறுக்கு வழியில் இழுத்துச் செல்லும் பிற மதத்தவரின் முயற்சிகளை நாம் பலமாக எதிர்க்கிறோம். இதை சுருக்கமாக குருதேவர் இப்படிக் கூறியுள்ளார்: “எல்லா சமய சம்பிரதாயத்தையும் அதிலுள்ள மக்களையும் நாம் மதிக்கிறோம். நல்ல குடிமக்களும் நிலையான சமுதாயமும் குழுவாக இருக்கும் சமயவாதிகளால் உருவாக்கப்படுகிறன. இருப்பினும் சைவர்கள் தமது சமயத்தை தற்காத்து தமது வழிமுறைகளை திருப்தியுடன் பின்பற்றி, பிற சமயக் கவர்ச்சிகளை—பழமையாக இருப்பினும் புதுமையாக இருப்பினும்—தவிர்க்கின்றனர்.§
குருதேவர்: இந்துக்களாக இருப்பவர்களுக்கு ஒரு மன வளம் உள்ளது. எல்லா சமய மக்களையும் அவர்கள் புரிந்துகொள்ளவும், ஒப்புக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் அன்பு செலுத்தவும் செய்து, தம் மனத்தில் அவர்கள் மிக நல்ல சமய மக்கள் என்று பதிவும் செய்கின்றனர்§